Free Space

நேற்று தனது நிமிடங்களை வழங்கி மஹிந்தவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ். h



பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்த மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி. யான விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு தனக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த நேரத்தை மேல­திக நேர­மாக வழங்­கிய இரா ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இறப்­பு­களின் பதிவு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) (திருத்தும்) சட்ட மூலம் இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்தில் மஹிந்த ஆத­ரவு எம்.பி. யான விம­ல­வீர திஸா­நா­யக்க மிக மோச­மாக அரசை விமர்­சித்து உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார்.

இவரின் உரையை வர­வேற்று மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது ஆத­ரவு அணி­யி­னரும் மேசையில் தட்டி வர­வேற்பும் உற்­சா­கமும் வழங்கிக் கொண்­டி­ருந்­தனர்.

அப்­போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருந்த லக்கி ஜெய­வர்­தன விம­ல­வீர திஸா­நா­யக்­கவின் நேரம் முடிந்­து­விட்­ட­தாகக் கூறி அடுத்த பேச்­சா­ள­ரான அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் பெயரை அழைத்தார்.

இத­னை­ய­டுத்து அமைச்சர் ஹக்கீம் பேச தயா­ரா­ன­போது அவ­ரது ஒலி­பெ­ருக்கியும் முடுக்­கி­வி­டப்­பட்­டது.

இதன்போது எழுந்த மஹிந்த ஆத­ரவு அணி எம்.பி. யான கெெஹ­லிய ரம்­புக்­வெல்ல விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு மேல­திக நேரம் வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தினார்.

ஆனால் லக்கி ஜெய­வர்­தன அவரின் நேரம் முடி­வ­டைந்­து­விட்­ட­தாக மீண்டும் கூறவே மஹிந்த ஆத­ரவு அணி எம்.பி.யினர் பலர் எழுந்து நின்று மேல­திக நேரம் வழங்க வேண்­டு­மென கூச்­ச­லிட்­டனர்.

அதன்­போது எழுந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் தனது நேரத்தில் 5 நிமி­டங்­களை விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு வழங்­கு­வ­தாக கூறினார்.

இதனால் மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது ஆத­ரவு அணி­யி­னரும் மேசை­களில் பல­மாகத் தட்டி வரவேற்கவே ஹிஸ்புல்லாஹ் சிரித்தவாறு அமர்ந்து கொண்டார்.



நேற்று தனது நிமிடங்களை வழங்கி மஹிந்தவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ். h நேற்று தனது நிமிடங்களை வழங்கி மஹிந்தவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ். h Reviewed by Madawala News on 8/26/2016 09:47:00 AM Rating: 5