இலங்கையில் அறிமுகமான Huawei P9 மொபைல் தொலைபேசிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிப்பு.



இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட முதற்­தொ­குதி Huawei P9 என்ற புதிய பிர­தான ஸ்மார்ட்­போன்கள் வெற்­றி­க­ர­மாக விற்றுத் தீர்ந்­துள்­ள­தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்­து­றையின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் இந்த ஸ்மார்ட்­போன்கள் கொண்­டுள்ள உயர்தரத்­தி­லான கம­ராவின் பெறு­பே­றாக Huawei நிறு­வனம் மற்றும் அதன் பிரத்­தி­யேக தேசிய விநி­யோ­கத்­த­ரான சிங்கர் ஸ்ரீலங்கா பி.எல்.சி. ஆகி­யன இந்த சாதனை இலக்கை அடைய முடிந்­துள்­ள­தாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் அறி­மு­க­மா­கிய உட­னேயே கொள்­வ­னவு செய்­வதில் மேல் மாகா­ணத்தில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் ஈடு­பட்­டுள்­ள­துடன் தென் மற்றும் மத்­திய மாகா­ணங்கள் உச்ச அள­வி­லான விற்­ப­னையை பதி­வாக்­கி­யுள்ள மாகா­ணங்­க­ளாகத் திகழ்­கின்­றன என Huawei இன் விற்­பனை புள்ளி விபர அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

சர்­வ­தேச ரீதி­யாக பிர­ப­ல­மான வர்த்­தக நாம­மாகத் திகழ்ந்து வரு­கின்ற Lieca Camera AG உடன் இணைந்து இணை வடி­வ­மைப்புச் செய்­யப்­பட்ட முத­லா­வது ஸ்மார்ட்போன் உற்­பத்­தி­யாக Huawei P9 திகழ்­கின்­றது.

P9 இன் இரட்டை வில்­லை­களைக் கொண்ட கமரா, ஸ்மார்ட்போன் புகைப்­ப­ட­வி­யலை அடுத்த மட்­டத்­திற்கு எடுத்துச் சென்று துல்­லி­ய­மான வர்­ணங்கள் மற்றும் ஈர்ப்­பான கறுப்பு – வெள்ளை படங்­களை கைவ­சப்­ப­டுத்­து­வ­தற்கு மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கின்­றது. P9 கொண்­டுள்ள பரந்த வகைப்­பட்ட நிறங்­க­ளி­லான புகைப்­ப­ட­வியல் தனிச் சிறப்­புக்கள், தனித்துவமான படங்கள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்கி, புத்தாக்கமான காட்சி விளைவுகளை அனுபவிப்பதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்றது.

குறிப்பிட்ட தொலைபேசியின் முழு விபரம் அறிய..
http://www.gsmarena.com/huawei_p9-7972.php
இலங்கையில் அறிமுகமான Huawei P9 மொபைல் தொலைபேசிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிப்பு. இலங்கையில் அறிமுகமான  Huawei P9 மொபைல் தொலைபேசிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிப்பு. Reviewed by Madawala News on 8/04/2016 11:40:00 AM Rating: 5