Free Space

மகிந்த, மைத்திரி, ரணிலை அடித்து விரட்டி விட்டு எமக்கு ஒரு சந்தர்ப்பம் தரவும். i



ஐந்து ஆண்­டு­க­ளுக்கு கூட்­டணி அமைத்­தாலும் ரணில்­–மைத்­திரி ஆகிய இரு­வ­ராலும் நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ரத்­தீர்வு பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது.

பாத­யாத்­திரை சென்று மஹிந்­தவால் மீண்டும் ஆட்­சியை கைப்­பற்­றவும் முடி­யாது. பொது­மக்­களை ஏமாற்றும் அர­சியல் நாட­கத்தை இரண்டு தரப்­பி­னரும் முன்­னெ­டுக்­கின்­றனர் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

ரணில்- – மைத்­திரி கூட்­ட­ணியை விரட்­டி­ய­டிக்­கவும், மஹிந்த குடும்ப அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவும் எமக்கு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் பாத­யாத்­திரை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை மற்றும் ஐக்­கி­ய­ தே­சியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி என்பன ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­பது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் பொரு­ளா­தார பிரச்­சி­னைகள், மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் என பல்­வேறு பிரச்­சி­னைகள் இருக்கும் நிலையில் இன்று அர­சாங்­கத்­தி­ன­ருக்கும் மஹிந்த அணி­யி­ன­ருக்கும் பாத­யாத்­தி­ரையே முக்­கி­ய­மாக தெரி­கின்­றது. முன்னாள் ஜன­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தான் மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்ளார்.

தமக்­கான சுக­போக வாழ்க்­கையை மீண்டும் பெற்­றுக்­கொண்டு தமது குடும்ப ஆட்­சியை கொண்­டு­செல்ல வேண்டும் என எதிர்­பார்க்­கிறார். அதற்­கான ஒரு முயற்­சி­யா­கவே இன்று பாத­யாத்­திரை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இன்று பாத­யாத்­தி­ரையை முன்­னெ­டுத்து செல்­வ­தனால் இவர்­களால் மீண்டும் ஆட்­சியை கைப்­பற்ற முடியும் என கனவு காண்­கின்­றனர்.

ஆனால் இனி ஒரு­போதும் மக்கள் இந்த குடும்ப கூட்­ட­ணிக்கு அதி­கா­ரத்தை வழங்­கப்­போ­வ­தில்லை. மஹிந்த ராஜபக் ஷவைப் போலவே இன்னும் ஒரு­சிலர் இன்று அர­சியல் அனா­தை­க­ளாக உள்­ளனர். அவர்­களும் இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமது அர­சியல் இருப்பை தக்­க­ வைக்­க­ பார்க்­கின்­றனர்.


நாட்டில் இன்று நிலவும் அர­சியல் கலா­சா­ர­மா­னது மிகவும் மோச­மான நிலை­மையில் உள்­ளது. ஆட்­சியில் இருந்­த­வர்­களின் மோச­டிகள், ஊழல்கள் தொடர்பில் பல்­வேறு சிக்­கல்கள் வந்த நிலையில் அவர்­களை விரட்­டி­ய­டித்து அதை மாற்றி ஆட்­சிக்கு வந்­த­வர்கள் முன்­னைய ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை இணைத்­துக்­கொண்டு நாட்டை மீண்டும் மாசு­ப­டுத்­தி­விட்­டனர்.

இந்த அர­சியல் கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும். இவர்­களின் அர­சியல் நாட­கத்தை இன்று மக்­க­ளுக்கு நன்­றாக உணர முடி­கின்­றது. இவர்கள் ஆட்­சிக்கு வந்­த­வுடன் கொடுத்த வாக்­கு­று­தி­களை நம்பி ஏமாந்த மக்­களை இனி­மேலும் ஏமாற அனு­ம­திக்கக் கூடாது. ரணி­லுக்கு நாட்டின் பொரு­ளா­த­ாரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. கடின உழைப்பில் நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் தொழி­லா­ள­ருக்­காக இவர்கள் பாது­காப்பை வழங்க முடி­யாது.

இன்று நாட்டில் இருக்கும் பிர­தான இரண்டு கட்­சி­களும் நாட்டை வீண­டித்து, சீர­ழித்து அர­சி­யலை அசிங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன . இந்த இரண்டு கட்­சி­க­ளுக்கும் ஆட்சி நடத்த மட்­டு­மல்ல, அர­சியல் செய்­யவே தகு­தி­யில்லை. இவர்கள் ஆட்­சிக்கு வந்தும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத நிலைமை உள்­ளது. ஆட்­சிக்கு வந்­த­வுடன் இவர்கள் என்ன கூறி­னார்கள்? என்ன வாக்­கு­றுதி கொடுத்­தனர். அந்த வாக்­கு­று­திகள் இன்று என்­ன­வா­னது? மைத்­திரி –ரணில் ஆட்­சியில் எந்த நன்­மை­யையும் நாட்­டுக்கு செய்­ய­மு­டி­யாது போய்­விட்­டது. வாரா­வாரம் வரி அதி­க­ரிக்­கின்­றது. விலை அதி­க­ரிக்­கின்­றது.

ஆனால் நல்­லாட்­சியில் மக்­க­ளுக்கு சிக்கல் இல்லை என கூறு­கின்­றனர். இன்று சர்­வ­தேச கடனில் மட்­டுமே நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்­கின்­றனர். இலங்­கையின் காணிகள் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு இருக்­கையில் இவர்கள் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு கூட்­டணி அமைத்து நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. இரண்டு கட்­சி­களும் கொள்­கையில் முரண்­பட்டு செயற்­படும் நிலையில் இவர்­களால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாது.

ஆகவே இன்று கூட்டணி அமைத்திருக்கும் பிரதமர் ரணில் –ஜனாதிபதி மைத்திரி இவர்கள் இருவரையும் விரட்டியடித்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். இப்போது நாம் முன்வந்துள்ளோம், இந்த நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்பும் பொறுப்பும் இன்று எமக்கு உள்ளது. ஆகவே மக்கள் இப்போது எமக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

 இந்த மோசடிக்கார அரசியலை விரட்டியடித்து தூய்மையான ஆட்சியை பலப்படுத்துவோம் என்றார்.

மகிந்த, மைத்திரி, ரணிலை அடித்து விரட்டி விட்டு எமக்கு ஒரு சந்தர்ப்பம் தரவும். i மகிந்த, மைத்திரி, ரணிலை அடித்து விரட்டி விட்டு எமக்கு ஒரு சந்தர்ப்பம் தரவும். i Reviewed by Madawala News on 8/01/2016 09:38:00 AM Rating: 5