ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கத்தின் முயற்சியில் உருவான நூலக திறப்பு விழா.



ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கத்தின் முயற்சியில் மடவளை அல் முனவ்வரா ஆரம்பப்பிரிவு பாடசாலையில் சுமார் 23 இலட்சம் ரூபா செலவில் உருவான நூலகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை  திறப்பு விழா மிக விமர்சையாக இடம்பெற்றது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று  (13) சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறப்பு விழாவுடன் பாடசாலைக்கு இந்த நூலக கட்டிடம் கையளிக்கப்பட்டது.

மடவளையை பிறப்பிடமாகக் கொண்டவரும் , ஜனாதிபதி சட்டத்தரணியாகவும், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய தூதுவராகவும் கடமையாற்றிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன்,
கல்வி அதிகாரிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், ஊர் ஜமாத்தினர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் , இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவி புரிந்த அனைவருக்கும்  ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
ஜஸாக் அல்லாஹ்

நிகழ்வின் படங்களை பார்க்க...
https://www.facebook.com/nafees1133/posts/10154441535809570?pnref=story

ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கத்தின் முயற்சியில் உருவான நூலக திறப்பு விழா. ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரிச் சங்கத்தின் முயற்சியில் உருவான நூலக திறப்பு விழா. Reviewed by Madawala News on 8/13/2016 04:06:00 PM Rating: 5