Free Space

நேற்றைய போராட்டத்துக்கு இன்று ஐ.தே. கவின் பதிலடி.. I



யானைக்கு நுளம்பு கடித்ததைப் போலத் தான் பொது எதிரணியினரின் எதிர்ப்பு ஊர்வலம் அமைந்திருந்தது என்று வெகுஜன ஊடக அமைச்சரான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அத்தோடு, பல்கலைக் கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் ஆட்களை விட குறைந்த அளவிலான ஆட்களே இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செதியாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மஹிந்த ஆதரவுத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அரசுக்கு எதிரான பேரணி தொடர்பிலும் இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அமைச்சர் கயந்தவிடம் கேள்வியொன்று எழுப்பப்பட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அதாவது, இந்த பேரணியெல்லாம் ஒரு விடயமே அல்ல. பொது எதிரணியினர் இலட்சக்கணக்கானோரை களமிறக்குவதாகக் கூறியும் இறுதியில் லிப்டன் சுற்றுவட்டத்தை நிறைக்கும் அளவுக்கே மக்களைக் கொண்டு வந்தார்கள்.

இதற்கு முன்னர் பிரதமரிடம் தொடர்பு கொண்டு மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு அவர்களால் கோரப்பட்டதற்கு இணங்க, கொம்பல் மைதானத்தில் கூட்டத்தை நடத்திக்கொள்ளுமாறு அனுமதியும் வழங்கப்பட்டது.

எனினும் எதிர்ப்பார்த்த அளவுக்கு கூட்டம் வராதமையால் லிப்டன் சுற்றுவட்டத்தில் இவர்கள் இறுதிக் கூட்டத்தை நடத்தினர். பல்கலைக் கழக மாணவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் கூட இதனையும் விட அதிகளவானோர் கலந்து கொள்வார்கள்.

இப்படியானவர்களின் போராட்டமானது யானைக்கு நுளம்பு கடித்ததைப் போலத் தான் இருக்கின்றது. கடித்து விட்டு நுளம்பு கேட்குமாம் வலித்ததா என்று. அதற்கு யானையோ நீ கடித்தாயா என மறு கேள்வியை எழுப்புமாம். இதுபோல் தான் மஹிந்த தரப்பினரின் எதிர்ப்பு ஊர்வலம் அமைந்திருந்தது. இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர் தொடர்ந்தும் விடையளித்தார்
நேற்றைய போராட்டத்துக்கு இன்று ஐ.தே. கவின் பதிலடி.. I நேற்றைய போராட்டத்துக்கு இன்று ஐ.தே. கவின் பதிலடி.. I Reviewed by Madawala News on 8/02/2016 06:51:00 PM Rating: 5