Ad Space Available here

மகிந்தர் சிறுகச் சிறுக செய்யும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் பெரி­ய­தொரு அழிவை எற்­ப­டுத்தும். i(எம்.சி.நஜி­முதீன்)

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மூலம் நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரு­கி­றது. அந்த அபி­வி­ருத்திப் பணி­களை பொறுத்­துக்­கொள்ள முடி­யாத ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி சதி­கார செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

ஆகவே ஒன்­றி­ணைந்த எதிர்க் ­கட்­சியின் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரா­கி­யுள்­ள­தாக அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா தெரி­வித்தார்.

எனவே, அவ்­வ­ணி­யினர் தமது சுயநலனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நாட்­டையும் மக்­க­ளையும் பாதிக்கும் வகையில் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களுக்கு எதி­ராக செயற்­பட வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி நடத்­திய பாத­யாத்­திரை மூலம் அவர் கள் எதிர்­பார்த்த எந்­த­வொரு இலக்­கி­னையும் அடை­ய­மு­டி­ய­வில்லை.

போராட்­டங்கள் மற்றும் பாத­யாத்­தி­ரை­களை நடத்­தும்­போது
அதற்­கென பொது­வான ஒழுங்­கு­வி­திகள் உள்­ளன.

ஆனால் ஒன்­றி­ணைந்த எதிர்­கட்சி நடத்­திய பாத­யாத்­தி­ரையில் அந்த ஒழுங்கு விதிகள் எதுவும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

அதன்­போது அவர்கள் நடந்­து­கொண்ட விதம் அநா­க­ரி­க­மா­ன­ம­தாகும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலைமை அலு­வ­ல­கத்­திற்கு முன்னால் நடந்து கொண்ட முறை அநா­க­ரி­கத்தின் உச்­ச­கட்­டத்தை பிர­தி­ப­லிக்­கி­றது.

தமது கட்சித் தலை­மை­ய­கத்­திற்கு முன்­னாலே அவ்­வாறு நடந்­து­கொள்­கி­றார்கள் என்றால் அவர்கள் நடத்­திய ஆட்சி பற்றி குறிப்­பி­டத்­தே­வை­யில்லை.

மேலும் அவ்­வ­ணி­யினர் குறப்­பிட்­ட­துபோல் பெருந்­தி­ர­ளான மக்ளை திரட்ட முடி­யா­மல்ப்­போ­னது. ஆக­வேதான் லிப்டன் சுற்­று­வட்­டத்தில் இறுதிக் கூட்­டத்தை நடத்தி புகைப்­ப­டங்­க­ளுக்கு சனத் திரள் உள்­ள­தாக காண்­பிக்க முனைந்­தனர்.

பாத­யாத்­தி­ரையின் பிர­தான நோக்கம் தாம் மேற்­கொண்ட குற்றச் செயல்­களை மூடி­ம­றைப்­ப­தாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­க­தல்ல. அவர் சிறுகச் சிறுக செய்யும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் பெரி­ய­தொரு அழிவை எற்­ப­டுத்தும். அவர் தன்­னையும் தனது குடும்­பத்­தையும் பாது­காப்­ப­தற்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்.

அதற்­காக நாட்­டையும் மக்­க­ளையும் பக­டை­காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­து­கிறார். இருந்­த­போ­திலும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் செயற்­பா­டுகள் பற்றி மக்­க­ளுக்கு நன்கு தெரியும். எனவே அதற்­கான பதிலை உரிய நேரத்தில் வழங்­கு­வார்கள்.

நாட்டில் தற்­போது நல்­லாட்சி நில­வு­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் இணைந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்ளில் ஈடு­பட்­டுள்­ளனர். சிங்­கள,தமிழ் , முஸ்லிம் மக்­களை இணைத்­துக்­கொண்டு நாட்டை முன்­னேற்ற அர­சாங்கம் பொறுப்­பேற்­றுள்­ளது. அதனை ஐந்து வருட காலத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது. அதற்­கான அங்­கீ­கா­ரத்தை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தமது சுயநலனை அடிப்படையாகக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயற்படுவதனை தடுக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே ஒன்றிணைந்த எதிர்கட்சியின் இவ்வாறான நடவடிக்கைளை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது என்றார்.

மகிந்தர் சிறுகச் சிறுக செய்யும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் பெரி­ய­தொரு அழிவை எற்­ப­டுத்தும். i மகிந்தர் சிறுகச் சிறுக செய்யும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் பெரி­ய­தொரு அழிவை எற்­ப­டுத்தும். i Reviewed by Madawala News on 8/04/2016 09:29:00 AM Rating: 5