Free Space

பா.ஜ.க. பிரமுகரின் மகன் கடத்தல்... ஒரு கோடி தந்தால் விடுவிப்போம். i


இந்தியா:

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. பிரமுகரின் மகனை உல்பா தீவிரவாதிகள் கடத்தி, ஒரு கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட இயக்கமான உல்பா தீவிரவாத அமைப்பானது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரது மகனை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக உல்பா அமைப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் 27 வயதான பா.ஜ..க. தலைவரின் மகன் குல்தீப் மோரனும் அவரை சுற்றிலும் 5 முகமூடி அணிந்த தீவிரவாதிகளும் இருந்தனர். தீவிரவாதிகள் கைகளில் துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.

அசாம் மாநிலம் சங்கலாங் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.பிரமுகர் ரத்னாஸ்வர்மோரன். இவரது மாமா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

குல்தீப் மோரனை விடுதலை செய்ய ரூ. 1 கோடி பணம் கேட்டு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். உல்பா தீவிரவாதிகள் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “மனிதாபிமான அடிப்படையில் அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும். வன்முறை எந்தவொரு வளர்ச்சியையும் கொண்டு வராது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
பா.ஜ.க. பிரமுகரின் மகன் கடத்தல்... ஒரு கோடி தந்தால் விடுவிப்போம். i பா.ஜ.க. பிரமுகரின் மகன் கடத்தல்... ஒரு கோடி தந்தால் விடுவிப்போம். i Reviewed by Madawala News on 8/23/2016 12:42:00 AM Rating: 5