Free Space

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எடுத்த நடவடிக்கைக்கு சிங்­கள ராவய பாராட்டு. i



முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக ஏனைய இன­மக்­களின் மனதைப் புண்­ப­டுத்­தா­த­வாறு நிறை­வேற்றிக் கொள்­வதில் சிங்­கள ராவ­ய­வுக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக குர்ஆன் கட­மையை நிறை­வேற்ற நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருப்­பது பாராட்­டத்­தக்­கது என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் இது விட­யத்தில் தலை­யிட்டு நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக குர்பான் கடமை நிறை­வேற்­றப்­படும் என அறி­வித்­துள்­ள­மை­யையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

முஸ்லிம் அமைச்­சர்­களும் உலமா சபையும் குர்பான் கடமை தொடர்பில் தெரி­வித்­துள்ள கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது சமயத் தலை­வர்­க­ளதும் அர­சியல் தலை­வர்­க­ளதும் கட­மை­யாகும்.

முஸ்­லிம்கள் தமது குர்பான் கட­மையை சட்­டங்­களை மீறி பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் மேற்­கொண்டால் அது ஏனைய இனத்­த­வரின் உணர்­வு­களைப் பாதிக்கும்.

இதனால் முறுகல் நிலை உரு­வா­கலாம் என்றே சிங்­கள ராவய சம்­பந்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி செயலாளர்களையும் ஆணையாளர்களையும் குர்பான் கடமையின் போது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது என்றார்.
முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எடுத்த நடவடிக்கைக்கு சிங்­கள ராவய பாராட்டு. i முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எடுத்த நடவடிக்கைக்கு சிங்­கள ராவய பாராட்டு. i Reviewed by Madawala News on 8/01/2016 07:24:00 PM Rating: 5