Ad Space Available here

புத்தளம் வெளிச்சவீட்டில் வெளிச்சமில்லை !i



கலங்கரை விளக்குகள் கடற்கரைகளில் நிறுவப்படுவதின் பிரதான நோக்கங்களில் கடலில் பிரயாணிப்பவர்களும், மீனவர்களும் தமது திசையை அறிந்துகொள்வதும், அவசரநிலைகளில் ஓர் கரையை அடைந்துகொண்டு இளைப்பாறுவதுமாகும் எனலாம். ஆனால் இன்று இலங்கையின் கரையோரப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வெளிச்சவீடுகளில் ஒரு சில விளக்குகள் செயலிழந்தும், மற்றும் சில வெளிச்சவீடுகள் விளக்குகள் அற்றும் இருப்பதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.

வெளிச்சவீடுகள் என்றால் அங்கு வெளிச்சம் இருக்கவேண்டும், விளக்குகள் இல்லாமையால் வெளிச்சமும் அற்றிருக்கும் பொழுது வெளிச்சவீடுகள் என்ற பெயரில் வெறும் கட்டிடங்கள் அல்லது கோபுரங்கள் மாத்திரம் எஞ்சியிருப்பதில் என்ன பயன் இருக்கின்றது!?

அந்த வகையில் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமைந்திருக்கும் புத்தளம் நகரிற்குட்பட்ட ஓர் வெளிச்சவீட்டின் நிலையே இது!
புத்தளம் நகரின் பெரிய பள்ளிவாயலுக்குப் பின்புறமாக இருக்கும் கடற்கரை (கரைக்கடை) வீதியில் நிறுவப்பட்டிருப்பதே இவ்வெளிச்சவீடு, இதனை அவதானிக்கும் யாவருக்கும் இவ்வெளிச்சவீடு கண்ணுக்கு இதமாகவும் உயரமாகவும் இருந்தாலும் இராக் காலங்களில் வெளிச்சமளிப்பதற்கு விளக்குகள் இல்லாமலிருப்பதை நன்றாக கண்டுகொள்ள முடிகின்றது. வெளிச்சவீட்டில் விளக்குகள் அற்று வெளிச்சமில்லாதது கவலைக்கிடமானதொன்றும் மக்களின் தேவை கருதி இவ்வெளிச்சவீட்டின் விளக்குகள் பொருத்தப்பட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பது இங்கு வாழும் மீனவர்களினதும், பொதுமக்களினதும், சுற்றுலாப் பயணிகளினதும் நீண்டநாள் அவாவாகும்.

இத்தேவையை புத்தள நகர சபையோ அல்லது இதற்குப் பொறுப்பான அதிகாரிகளோ கண்டறிந்து சரியாக பொறுப்பை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மேற்குறித்தோரின் வாயினால் வெளியில் கூறமுடியாத உள்ளக்குமுறலும் நீண்டகால வேண்டுகோளுமாகும்.

ஆகையால்  மக்களின் இது போன்ற பிரச்சினையை இவ்வாறு நாம் சமூக மன்றத்திற்குத் தெரியப்படுத்தி ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதையிட்டு யாரும் கொதித்தெழாது வீணான விமர்சனங்கள் செய்யாது மக்களாகிய நீங்களும் இதனை உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு வினயமாக வேண்டுகின்றோம்.

உங்களில் ஒருவன்...
அ(z)ஸ்ஹான் ஹனீபா
புத்தளம்

புத்தளம் வெளிச்சவீட்டில் வெளிச்சமில்லை !i புத்தளம் வெளிச்சவீட்டில் வெளிச்சமில்லை !i Reviewed by Madawala News on 8/25/2016 11:22:00 AM Rating: 5