Oceas

மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம்., ஷிப்லி பாறூக் முழக்கம்..!i



நன்றி -ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்..


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலங்களின் பொழுது  இடம் பெயர்ந்து ஒவ்வொரு இடங்களாக வாழ்ந்து வந்த மக்கள்அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும் மீளக்குடியேறுவதற்கு முற்படும்போது அவர்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்ற அதே வேளையில் முஸ்லிம் கிராமங்கள் அதில் உள்ள்வாங்கப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் 22.08.2016 திங்கட் கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்தார்.


குறிப்பாக மண்முனைப்பற்றில் அமைந்துள்ள மண்முனை, ஒல்லிக்குளம், கீச்சம்பள்ளம் மற்றும் மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று, கிரான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள முஸ்லிம்கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் மீள்குடியேற நினைக்கின்ற போது அவர்களுக்கு தேவையானஅத்தியாவசியமான மலசல கூட வசதி, நீர் வசதி அதே போன்று அவர்களுக்குரிய வீடு வசதிகள் அரசாங்கத்தால் செய்துகொடுக்கப்படுகின்ற வேளையில் தொடர்ச்சியாக அனைத்து திட்டங்களிலும் முஸ்லிம்கள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்ற விடயம் மிகவும் கவலைக்குரியதாகும்.

 இந்த விடயத்தினை  ஆதார பூர்வமாகவும் கூட்டத்தில் பங்கேற்ற இணை தலைவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் அமீர் அலி இராஜாக மைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாகாணசபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தினார் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த ஷிப்லி பாரூக்.. இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகஎங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டம் மற்றும்மீள்குடியேற்ற அமைச்சினூடாக வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டம் அதே போன்று மலசல கூடங்கள் கூடகொடுக்கப்படாமல் அந்த மக்கள் அங்கே குடியேறவிடாமல் தடுக்கின்ற ஒரு செயற்பாடு மிகத் திட்டமிட்டஅடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றது.

இலங்கையில் புறையோடிப்போயிருந்த யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கப்பட்டுவருக்கின்ற விடயத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று   ஷிப்லி பாறூக் தெரிவித்தமையானது எல்லோரினதும் கவனத்தில் கொள்ளப்பட்ட விடயமாக காணப்பட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் இதுவரை காலமும் மத்திய அரசாங்கத்திலும் மாகாண சபையிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கம் வகித்தும் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமையானது மன வேதனை அளிக்க கூடியவிடயமாக இருக்கும் அதே இடத்தில் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் அதிக பங்கு இருப்பதனை நான் எனது கருத்தாக இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்தோடு மாவட்டத்தில் சாதரண மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற பொறியியலாளர் ஷிப்லி பாரூகினால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களினுடைய மீள் குடியேற்றம் சம்பந்தமாக பகிரங்கமாக குரல் கொடுக்க முடியும் என்றால் ஏன் ஏனைய சிரேஸ்ட முஸ்லிம் அரசியல்வாதிகளினால் குறித்த விடயம் சம்பந்தமாக குரல் கொடுக்க முடியவில்லை என்பதுதான் பொதுமக்களினுடைய கேள்வியாக தென்படுக்கின்றது.


நன்றி -ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்..




மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம்., ஷிப்லி பாறூக் முழக்கம்..!i மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம்.,  ஷிப்லி பாறூக் முழக்கம்..!i Reviewed by Madawala News on 8/23/2016 06:34:00 AM Rating: 5