Free Space

தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் மாந­கர சபை ஆணை­யாளர் தம்­மிக முத்­து­கல தெரிவித்தவை. i



-ARA.Fareel

தெஹி­வளை பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணிகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­வ­தா­கவும் அவ்­வாறு விஸ்­த­ரிப்பு வேலைகள் தொடர்ந்தால் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்கள் அகற்­றப்­ப­டு­மெ­னவும் தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யாளர் தம்­மிக முத்­து­கல தெரி­வித்தார்.

தெஹி­வளை பாத்யா மாவத்தை, பள்­ளி­வாசல் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்;பள்­ளி­வாசல் நிர்­மாணம் தொடர்பில் தொடர்ந்து முறைப்­பா­டுகள் கிடைத்­து­வ­ரு­வதால் இது தொடர்­பாக கொஹு­வளை பொலி­ஸுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸார் கண்­கா­ணிப்பு பணி­களை மேற்­கொள்­வார்கள்.

தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்­காக வழங்­கி­யுள்ள KBP/ 143/ 2015 ஆம் இலக்க அனு­ம­திப்­பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ளது. இது தொடர்­பாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பள்­ளி­வாசல் தொடர்ந்தும் நிர்­மா­ணிக்­கப்­பட்டால் அதற்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வினைப் பெற்று சட்­ட­வி­ரோத விஸ்­த­ரிப்­புகள் அகற்­றப்­படும்.

வீடொன்­றுக்குள் முஸ்லிம் பள்­ளி­வாசல் இயங்கி வரு­வ­தாக கிடைத்த தக­வல்­க­ளுக்­க­மை­வாக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள் அவ்­வி­டத்தை பரி­சோ­தனை செய்த பின்பே தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்துள்ளது என்றார்.
தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் மாந­கர சபை ஆணை­யாளர் தம்­மிக முத்­து­கல தெரிவித்தவை. i தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் மாந­கர சபை ஆணை­யாளர் தம்­மிக முத்­து­கல தெரிவித்தவை. i Reviewed by Madawala News on 8/04/2016 11:47:00 AM Rating: 5