Free Space

பழிவாங்கல், குரோதம், வைராக்கியம் மூலம் அனைவரும் தூர விலகிச் செல்லும் சம்பவங்களே நடக்கும். I

பழிவாங்கல், குரோதம், வைராக்கியம் மூலம் அனைவரும் தூர விலகிச் செல்லும் சம்பவங்களே நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
.

பாத யாத்திரைகளில் சில சில விடயங்களை கூறுவது சாதாரணமான நிகழ்வு எனவும் பாத யாத்திரை செல்வது தொடர்பில் தனக்கு விரும்பம் இல்லை என ஜனாதிபதி கூறியிருந்தாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
.

தென் கொரியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதியிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
.

சனத் நிஷாந்தவுக்கு எதிராக நடத்துவது, புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு ஈடானது என தான் நம்புவதாகவும் சனத் நிஷாந்த பிரதேசத்தில் மிகவும் பிரபலமான நபர் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.
.

புத்தளம் பிரதேச மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்படுவது பாதிப்பை ஏற்படுத்தும்.
.

கட்சியின் உறுப்பினர்களுக்கு கட்சியின் மீதான வெறுப்பு அதிகரிக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பழிவாங்கல், குரோதம், வைராக்கியம் மூலம் அனைவரும் தூர விலகிச் செல்லும் சம்பவங்களே நடக்கும். I பழிவாங்கல், குரோதம், வைராக்கியம் மூலம் அனைவரும் தூர விலகிச் செல்லும் சம்பவங்களே நடக்கும். I Reviewed by Madawala News on 8/05/2016 05:55:00 PM Rating: 5