Oceas

கோட்டாபய கடற்படை முகாமுக்கு மக்கள் காணிகளை சுவீகரிப்பதாக எதிர்ப்பு. i



சுமார் 617 ஏக்கர் காணியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருக்கும் கோட்டாபய கடற்படை முகாமிற்கான காணிகளை உத்தியோகபூர்வமாக சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகளுக்கு மக்கள் இன்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கோட்டாபய கடற்படை முகாமிற்குள் நில அளவையாளர்கள் உட்செல்ல முடியாதவாறு வாயிலை மறித்து நின்ற மக்கள், வட்டுவாகல் பாலத்திற்கு குறுக்காக நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.

மக்கள் அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

மக்களின் மகஜரினை அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

கடற்படையினருக்கு சொந்தமான காணியை மாத்திரமே நில அளவை திணைக்களத்தினரின் உதவியுடன் அளப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கோட்டாபய கடற்படை முகாமுக்கு மக்கள் காணிகளை சுவீகரிப்பதாக எதிர்ப்பு. i கோட்டாபய கடற்படை முகாமுக்கு மக்கள் காணிகளை சுவீகரிப்பதாக எதிர்ப்பு. i Reviewed by Madawala News on 8/03/2016 07:38:00 PM Rating: 5