Free Space

வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் வீடு சென்றனர். i



அனா

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி வலய கல்வி அலுவலக பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவிகள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது தொடர்பில் இன்று (03.08.2016) மதியம் 01.00 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இன்று மாலை 05.30 மணியளவில் ஒரு மாணவியை தவிர மற்றையவர்கள் வீடு திரும்பியுள்ளதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவிகள் தங்களுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் போவதுடன் வயிற்று வலியாகவும் உள்ளது என்று வகுப்பாசிரியையிடம் தெரிவித்ததையடுத்து மாணவிகள் பதினாறு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மாணவிகளுக்கு வயிற்று வலியுடன் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது தொடர்பாக மாணவிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஓரு மாணவியை தவிர ஏனைய மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதனால் குறித்த மாணவியைத் தவிர ஏனைய பதினைந்து மாணவிகளும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சனாமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் வீடு சென்றனர். i வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள்  வீடு சென்றனர். i Reviewed by Madawala News on 8/04/2016 06:42:00 AM Rating: 5