யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜ­ப­க்ஷ மீண்டும் களத்தில்... i



-எஸ்.ஜே.பிரசாத்

அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தலை­மையில் நடத்­தப்­படவுள்ள ஸ்ரீலங்கா
சுப்பர் 7 றக்பி தொடரில் யோஷித மற்றும் ரோஹித ஆகி­யோரும் களம்­கா­ண­வுள்­ளனர்.

எட்டு றக்பி கழ­கங்கள் பங்­கு­பற்றும் இலங்கை சுப்பர் எழுவர் (ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ்) றக்பி போட்­டி­களும் 18 வயதுக்குட்பட்ட 8 பாட­சாலை அணிகள் பங்­கு ­பற்றும் அணிக்கு எழுவர் றக்பி போட்­டி­களும் இரண்டு கட்­டங்­க­ளாக கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் நடை­பெ­ற­வுள்­ளன.

தொலைத்­தொ­டர்புகள் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் றக்பி 7 தொடர் உத்­தி­யோ­க­பூர்வமாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

நேற்று கொழும்பு கிங்ஸ் பெர்ரி ஹோட்­டலில் பிரமாண்­ட­மாக நடை­பெற்ற ஆரம்ப நிகழ்வில் சர்­வ­தேச வர்த்­தக உற­வுகள் அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி மற்றும் விமா­னப்­படை கட்­டளைத் தள­பதி ககன் புளத்சிங்­கள ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

எக்செஸ் கிங்ஸ், கார்கில்ஸ் கிள­டி­யேட்டர்ஸ், எ­டி­சலாட் பென்தர்ஸ், ஈஸி வுல்வ்ஸ், ஜஸ்ட் இன் குறூப் ட்ரகன்ஸ், சொவ்ட் லொஜிக் வோரியர்ஸ், ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஈகிள்ஸ், வோக்கர்ஸ் சி எம். எல். வைப்பர்ஸ் ஆகிய அணிகள் ஸ்ரீலங்கா சுப்பர் எழுவர் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன.

இதில் ஈஸி வுல்வ்ஸ் அணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ
வின் இரண்­டா­வது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவும், சொவ்ட் லொஜிக் வோரியர்ஸ் அணியில் இளைய புதல்வர் ரோஹித ராஜ­ப­க் ஷவும் விளை­யா­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தத் தொடரில் மொத்தம் 23 வெளிநாட்டு வீரர்­களும் விளை­யா­டு­கின்­ற­னர்.
இப் போட்­டி­களின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 6ஆம், 7ஆம் திக­தி­க­ளிலும்
இரண்டாம் கட்டம் 13ஆம், 14ஆம் திக­தி­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளன.

யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜ­ப­க்ஷ மீண்டும் களத்தில்... i யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜ­ப­க்ஷ மீண்டும் களத்தில்... i Reviewed by Madawala News on 8/04/2016 11:33:00 AM Rating: 5