எல்லாவற்றுக்கும் பாதை யாத்திரைன்னு கிளம்பி பாதயாத்திரையின் பெயரே கெட்டுடுச்சு. i

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

ஒரு காலத்தில் பாதை யாத்திரை செல்வதென்பது தமது இறுதிக் காலத்தில் நன்மை செய்வதற்காக என்றிருந்தது. இன்று எடுத்த எடுப்பில் எல்லாவற்றுக்கும் பாதை யாத்திரை என்று ஒரு கூட்டம் கிளம்பி, பாதை யாத்திரை சென்று அதனுடைய புனித தன்மைக்கு இழுக்கினை ஏற்படுத்தி வருகின்றது.
.
இது நல்லாட்சியின் செயற்பாடுகளை நாசப்படுத்துகின்ற கூட்டமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் தெரிவித்தார்.
.

தோப்பூரில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் புனர் நிர்மாணம் தொடர்பாக தோப்பூர் ஆதரவாலர்களை சந்தித்து உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த 20 வருடங்களாக எதிர் கட்சியில் இருந்த படியினால் வேலைவாய்ப்பு விடயங்களில் எமது கட்சி ஆதரவாளர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
.
சமுர்த்தி வேலை வாய்ப்பு கூட எமது கட்சி ஆதரவாலர்களுக்கு கிடைக்க வில்லை.தற்போது நல்லாட்சி அரசாங்கம் அமைந்து தமது சேவைகளை மெதுமெதுவாக தவிழ்ந்து செய்து கொண்டிருக்கின்றது.அத்தோடு இன்னும் குறிப்பிட்ட காலத்தில் தனது நடையினை ஆரம்பித்து ஓட்டம் எடுக்கும் போது நிச்சயமாக எமது கட்சி ஆதரவாலர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
.

அவ்வாறு விமோசனம் கிடைக்கும் காலத்தில் நான் எனது சேவைகளை கட்சி இனம் மதம் என்கின்ற வேறுபாடுகளுக்கு அப்பால் செய்வேன்.ஏன் என்றால் எனது தந்தை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரது அரசியல் பயணத்தில் மூவின மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளதோடு எனது அரசியல் பயணத்திற்கும் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்கள்.
.
ஆதலால் எனது எதிர்கால அரசியல் பயணம் மூவின மக்களையும் ஒன்றிணைத்ததாக இருக்குமெனவும்  அவர் தெரிவித்தார்

எல்லாவற்றுக்கும் பாதை யாத்திரைன்னு கிளம்பி பாதயாத்திரையின் பெயரே கெட்டுடுச்சு. i எல்லாவற்றுக்கும் பாதை யாத்திரைன்னு கிளம்பி பாதயாத்திரையின் பெயரே கெட்டுடுச்சு. i Reviewed by Madawala News on 8/03/2016 11:34:00 AM Rating: 5