Oceas

ஷுஹதாக்களுக்காக இன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தியாகம்... i


முஹம்மத் ஹம்ஸா கலீல்.
.

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே  கொலைவெறி கொண்ட கொடூர பயங்கரவாதப் புலிகள் எமது மண்ணில் (காத்தான்குடி) எம் உடன் பிறப்புக்களை இறை இல்லங்களில்  கொன்று குவித்த நாள்.
நாளைய ஆகஸ்ட் 03.
.

மன்னிக்கும் மனப்பாங்கை கொண்டநாம் மன்னித்தாலும் வாழ் நாளில் மறக்க முடியாத கருங்கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ள ஒரு வரலாறு.
.

நாளைய நாள் ஷுஹதாக்களை நினைவுபடுத்தி இன்றைய சமுகத்திற்கு வரலாறு கூறப்பட வேண்டிய நாள்.
.

இந்த நாளை நாம் நினைவு கூரும் நோக்கில் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு காத்தான்குடி -01 மீரா பெரிய ஜும்மா பள்ளிவாயலில் பல மார்க்க நிகழ்வுகளை காத்தான்குடி ஷுஹதாக்கள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
.

தன்னுயிரை ஷஹீதாக்கி எம் இருப்பிடத்தை உறுதிப்படுத்திய அந்த சகோதரர்களுக்காக பிரார்த்திக்க....
* நாம் அனைவரும் நாளை காலை 10.00 மணிக்கு குறித்த மஸ்ஜிதில் ஒன்றிணைவோம்....
.

*அவர்களுக்காகவும் எமக்காகவும் பிரார்த்திப்போம்.
.

*அவர்கள் பெயரால் ஸதக்காக்களை அதிகமதிகம் வாரிவழங்குவோம்.
.

*வறுமையில் வாழும் ஷுஹதாக்கள் குடும்பங்களை இனம்கண்டு எம்மாலான உதவிகளை தான தர்மங்களை அவர்களுக்கு வழங்குவோம்.
.

*வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகளை பறக்க விடுவோம்.
.

*நாளைய ஒருநாள் வீண் விளையாட்டுக்களையும் களியாட்டங்களையும் தவிர்த்து அந்த சம்பவம் நடந்த இரத்தத்தால் தோய்ந்த கறுப்பு சோக நாளை மீட்டிப்பார்ப்போம்.
.

*எல்லோரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து ஒன்றிணைவோம் வாரீர்*.

ஷுஹதாக்களுக்காக இன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தியாகம்... i ஷுஹதாக்களுக்காக இன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தியாகம்... i Reviewed by Madawala News on 8/03/2016 08:05:00 AM Rating: 5