Oceas

அரபு எழுத்துக்களால் ஆன பொதிகளில் அடைக்கப் பட்ட ஏழாயிரம் கிலோ தேயிலை கைப்பற்றப் பட்டது. i



- ஜே.எம்.ஹபீஸ்-

அராபிய எழுத்துக்களால் ஆன பொதிகளில் இலங்கையின் அதிசிறந்த தேயிலை எனக்குறிப்பிடப்பட்ட சுமார் ஏழாயிரம் கிலோ  கழிவுத் தேயிலையை கடுகண்ணாவைப்  பிரதேசத்தில் வைத்து பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.(1.8.2016)

இதன் பெறுமதி பன்னிரண்டரை இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலீசாருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின்படி வெலம்பொடை, தவுலகலைப் பிரதேசத்தில் இருந்து கொழும்பிற்கு கொண்டு செல்ல தயார் செய்யப்பட்டதாகும்.

10 கிலோ கொண்ட பெட்டிகளில் கையடக்கமாககப் பொதி செய்யப்பட்டு அவற்றிற்கு பிளாஸ்டிக் ஸ்டிகர்கள் மூலம் சீல் வைக்கப்பட்டுமிருந்ததாகப் பொலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் பொதிசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஸ்டிகர்களில் அராபிய எழுத்துக்களில் கவர்ச்சியாக எழுதப்பட்டிருந்தாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

எனவே இவை அரபு நாடு ஒன்றுக்கு ஏற்றுமதிக்காக கொண்டு செல்ல பொதி செய்யப்பட்டிருக்கலாம் எனப்  பொலீசார் சந்தேகிக்கி;ன்றனர்.

இதுபோன்ற பல சம்பவங்கள் இப்பிரதேசத்தில் அடிக்கடி இடம் பெற்று வருவதாகப் பொலீசார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரபு எழுத்துக்களால் ஆன பொதிகளில் அடைக்கப் பட்ட ஏழாயிரம் கிலோ தேயிலை கைப்பற்றப் பட்டது. i அரபு எழுத்துக்களால் ஆன பொதிகளில் அடைக்கப் பட்ட ஏழாயிரம் கிலோ தேயிலை கைப்பற்றப் பட்டது. i Reviewed by Madawala News on 8/01/2016 04:13:00 PM Rating: 5