Saturday, August 13, 2016

வடக்கு முஸ்லிம்கள் இன்னமும் உலகிலிருந்து அழிந்துபோகவில்லை. I

Published by Madawala News on Saturday, August 13, 2016  | 

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் நிகழ்வுகளில் வடக்கு முஸ்லிம்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் நிகழ்வுகளில் வடக்கு முஸ்லிம்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே அமைந்திருக்கின்றது.
.

இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது “வடக்கு முஸ்லிம்கள் இன்னமும் உலகிலிருந்து அழிந்துபோகவில்லை” என நான் நினைக்கின்றேன் என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய அ.அஸ்மின் தெரிவித்துள்ளார். அவர் மேலு தெரிவிக்கையில்
.

1990 களில் பல்வந்த இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்கள்; இந்தப் பூமியில் இருந்து இன்னமும் அழிந்துபோகவில்லை. ஆனால் அவர்களது செயற்பாடுகள் பல அவர்கள் இந்தப் பூமியில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டார்களோ என்ற கேள்வியை எமக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றது.
.
  அவ்வாறான ஒரு அம்சமாகவே நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வுகளில் அவர்களது பங்கேற்புகள் அமைந்திருக்கின்றன.  இதே போன்றுதான் அரசியலமைப்பு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான மக்கள் கருத்தறியப்பட்ட சமயத்திலும் வடக்கு முஸ்லிம்கள் மிகவும் சொற்ப அளவிலேயே தம்முடைய பங்களிப்புகளை வழங்கினார்கள். .

.
காணமல் போனோர் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் பல காணாமல்போன முஸ்லிம்களின் உறவினர்கள் கருத்துக்கூறத் தவறியிருந்தார்கள். நிலைமாறுகால நீதி தொடர்பிலான செயற்பாடுகளிலும் வடக்கு முஸ்லிம்கள் போதுமான அளவு தங்களுடைய பங்களிப்புகளை வழங்கவில்லை. இது வடக்கு முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்படாகவே இருக்கின்றது.
.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வடக்கு முஸ்லிம்கள் வடக்கிலும் வடக்கிற்கு வெளியிலும் பரந்து வாழ்கின்றோம், இழக்கப்பட்ட எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு சமூகமும் தன்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொள்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு முஸ்லிம்கள் தமது உரிமைகள் பித்ரா அரிசியைப் போல அல்லது குர்பான் இறைச்சியைப் போல வீடுதேடிவரும் என்று காத்துக்கொண்டிருக்கின்றார்களா என்று கேட்கத்தோன்றுகின்றது.
.
எமது சமூகத்தின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே இதனை நான் காண்கின்றேன். காசுக்கு எமது வாக்குகளை விற்கத் தொடங்கிய நாள் முதல், மக்களின் வாக்குகளை காசுக்கு விலைபேசுகின்ற அரசியல் தலைவர்கள் செயற்படத் தொடங்கிய நாள் முதல் வடக்கு முஸ்லிம் மக்காகிய நாம் எமது சுயத்தையும் சுயாதீனத்தையும் இழந்துவிட்டோம், .
.
எந்தவொரு செயற்பாட்டிலும் காசு, இலவசம், தொழில் வாய்ப்பு ,அற்ப உதவிகளுக்குப் பின்னால் அணிதிரள்கின்ற ஒரு கேவலமான நிலை வடக்கு முஸ்லிம்களிடத்திலே ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு நான் கூறுகின்றபோது பலர் உணர்ச்சிவயப்படக்கூடும், நின்று நிதானமாக சிந்தித்தால் இவ்வாறு நான் கூறுவதன் பின்னால் உள்ள உண்மைகள் உணரப்படும்.
.

இதன் விளைவாக எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை, நாம் இதுநாள்வரை முகம்கொடுத்துவருகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தவும், அல்லது அவற்றை உரியமுறையில் ஆவணப்படுத்தவும் எமக்கு முன்னால் கிடைக்கின்ற வாய்ப்புக்களை நாம் தவறவிட்டுக்கொண்டே வருகின்றோம்; இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும், இதனை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும், சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் போராட்டம் நடாத்துகின்றவர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோல்; உங்களது சுகபோக சொகுசு உலகில் இருந்து சற்று கீழே இறங்கிவாருங்கள் களத்திலே, நிஜத்திலே, யதார்த்தத்திலே நாம் செய்து முடிக்கவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.
.
அவற்றில் ஒருசிலதையாவது நாம் இப்போதே செய்து முடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
.
அந்தவகையில் நல்லிணகக்த்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றிலே நாம் முழுமையாக பங்கேற்கவேண்டும், எமது கருத்துக்களை எமது பிரச்சினைகளை, எமது எதிர்பார்ப்புகளை முழுமையாக அங்கு முன்வைக்கவேண்டும், ஊடகத்துறையினரும் இவ்விடயத்தில் முஸ்லிம் மக்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top