Accaddemy

(நேரடி வீடியோ) பல குற்றங்களில் தேடபப்ட்டு வந்த பாதாள உலக 'பொடி சமிந்த' சுட்டுக் கொல்லப்படும் காட்சி. i



(எம்.எப்.எம்.பஸீர்)

பிர­பல பாதாள உலகக்குழு­வொன்றின் உறுப்­பி­ன­ரான 'பொடி சமிந்த' எனும் சொலமன் சானுக மது­ரங்க சுட்­டுக்­ கொல்­லப்­பட்­டுள்ளார்.பொர­லஸ்­க­முவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பொர­லஸ்­க­முவ –பிலி­யந்­தலை பிர­தான வீதியின் கட்­டு­வா­வல விகா­ரைக்கு முன்­பாக அடி­யாளம் தெரி­யாதோர் மேற்­கொண்ட துப்­பக்கிப் பிர­யோ­கத்­தி­லேயே அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

குறித்த சம்­ப­வ­மா­னது நேற்று முன் தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.

பல வகையான குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்த பொடி சமிந்த' எனும் சொலமன் சானுக மது­ரங்க மோட்டார் சைக்­கி­ளிலில் 'பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது இன்னொரு வண்டியில்  வந்த அடை­யாளம் தெரி­யாதோர் துப்­பாக்கிப் பிரயோகம் செய்­துள்­ள­தா­கவும் அதனால் படு­கா­ம­டைந்த அவர் களு­போ­வில வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­திக்­கப்பட்ட நிலை­யி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் ஊடகப்பேச்சாளர் சுட்­டிக்­காட்­டினார்.
இது குறித்து மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,

தெஹி­வளை அத்­தி­டிய பகு­தியைச் சேர்ந்த 30 வய­து­டைய பொடி சமிந்த என அறி­யப்­படும் 30 வய­து­டைய சொலமன் சானுக மது­ரங்க, பிலி­யந்­தல பகு­தியை நோக்கி மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துக்கொண்­டி­ருந்­துள்ளார்.

இதன்­போது காரில் வந்த அடையாளம் தெரி­யாத நபர்கள் அவர் பய­ணித்த மோட்டார் சைக்­கிளை கட்­டு­வா­வல விகா­ரைக்கு முன்­பாக காரினால் மோதி­யுள்­ளனர். இதன்­போது பொடி சமிந்த நிலை தடு­மா­றவே காரில் இருந்து துப்­பாக்கிப் பிர­யோகம் செய்து விட்டு சந்­தேக நபர்கள் தப்பிசென்றுள்­ளனர்.

இதன்போது படு­கா­ய­ம­டைந்து உயி­ருக்கு போரா­டிக்­கொன்­டி­ருந்த நிலையில் பொடி சமிந்த பிர­தே­ச­வா­சி­களால் உட­ன­டி­யாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ளார். இந் நிலை­யி­லேயே சிகிச்சைப் பல­னின்றி அவர் வைத்­தி­ய­சாலையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இது தொடர்பில் சிறப்பு விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள பொர­லஸ்க முவ பொலிஸார் கொலை தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்கொண்­டுள்­ளனர். நீண்­ட­கா­ல­மாக இரு வேறு பாதாள உலகக் கும்­பல்­க­ளுக்கு இடையே நில­விய பகையின் பிர­தி­ப­லனே இந்த கொலை என ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நேற்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.
(நேரடி வீடியோ) பல குற்றங்களில் தேடபப்ட்டு வந்த பாதாள உலக 'பொடி சமிந்த' சுட்டுக் கொல்லப்படும் காட்சி. i (நேரடி வீடியோ) பல குற்றங்களில் தேடபப்ட்டு வந்த பாதாள உலக 'பொடி சமிந்த'  சுட்டுக் கொல்லப்படும் காட்சி. i Reviewed by Madawala News on 8/04/2016 09:55:00 AM Rating: 5