இரத்தினபுரி அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவி திவ்யா சந்திரமோகன் சாதனை. #வாழ்த்துக்கள்i


-எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி-

இரத்தினபுரி அல் மக்கியா  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  க.பொ.தா.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி திவ்யா  சந்திரமோகன் கொழும்பு விவேகானந்த சபையினால்  கடந்த  2014 ஆண்டு  நடத்திய பாடசாலை மாணவர்களுக்கான சைவ சமய பாடப் பரீட்சையில் அகில இலங்கை  ரீதியில் முதலாமிடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் இரத்தினபுரி தமிழ் சமூகத்திற்கும்  பெருமையையும் புகழையும்  தேடிக் கொடுத்துள்ளார்.

மேற்படி பாடசாலையில் அண்மையில் இடம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது மாணவி திவ்யாவிற்கான சிறப்புச் சான்றிதழை பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் வழங்கி வைத்தார்.

இரத்தினபுரி கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுள் கடந்த பல வருடங்களாக மிகச்சிறந்த கல்விப் பெறுபேறுகளைப் பெற்று வரும் இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 250 இற்கும்  மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

மேற்படி பாடசாலையில் கடந்த பல வருடங்களாக இந்து சமய பாடத்திற்குரிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவி திவ்யாவின் வெற்றி பாடசாலைக்கும் இரத்தினபுரி தமிழ் சமூகத்திற்கும் பெருமையை  தேடிக் கொடுத்துள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் மேலும்  பாராட்டியுள்ளார்.
இரத்தினபுரி அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவி திவ்யா சந்திரமோகன் சாதனை. #வாழ்த்துக்கள்i இரத்தினபுரி அல் மக்கியா  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவி திவ்யா  சந்திரமோகன் சாதனை. #வாழ்த்துக்கள்i Reviewed by Madawala News on 8/09/2016 02:18:00 PM Rating: 5