Free Space

ICC டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் 5 இடத்துக்கு முன்னேறிய ரங்கன ஹேரத்...

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்டில் 13 விக்கெட்டுக்களை வீழ்த்திய  ரங்கன ஹெரத் பந்து வீசசு தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 3-0 என வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ‘வயிட்வாஷ்’ செய்தது. 


கொழும்பில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 81 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை ஹேரத் வீழ்த்தினார். 

2-வது இன்னிங்சில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன்  மொத்தம் 13 வி்க்கெட்டுக்கள் வீழ்த்தி இலங்கை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கியமாக காரணமாக இருந்தார்.

இதனால் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 3-வது இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 4-வது இடத்திலும், ஹெராத் 5-வது இடத்திலும், யாசிர் ஷா 6-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 7-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும், ட்ரென்ட் போல்ட் 9-வது இடத்திலும், மோர்னே மோர்கல் 10-வது இடத்திலும் உள்ளனர்.
ICC டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் 5 இடத்துக்கு முன்னேறிய ரங்கன ஹேரத்... ICC டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் 5 இடத்துக்கு முன்னேறிய ரங்கன ஹேரத்... Reviewed by Madawala News on 8/19/2016 07:14:00 PM Rating: 5