Accaddemy

இவ்வருடம் நடைபெறும் ''தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா'' நீங்களும் கட்டுரைகளை எழுதலாம். #islam



இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள் 'தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா' வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது எனக் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஆய்வரங்குகளுக்கான கட்டுரைகளுக்கான தலைப்புகளும் தரப்பட்டிருந்தன.

இந்த விழாவை சிறிய அளவிலான சர்வதேச மாநாடாக மாற்றுவது குறித்துத் தற்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே கட்டுரைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கால எல்லையை நீடிக்க ஆய்வகம் முடிவெடுத்து கட்டுரைகள் கிடைக்கப் பெறும் இறுதித் தினமாக செப்டம்பர் 30ம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுரைகளை எழுதுவதற்கும் தேச, இன வரம்புகள் இல்லை.

கட்டுரைகளை எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியவாறு Dr, Jinnah Sherifudeen, 1
6A, School Avenue, 
Off Station Road, 
Dehiwala என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை அனுப்புவோர் தமது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட மறக்க வேண்டாம். கட்டுரைகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்தியக் கட்டுரையாளர்கள் கவிஞர் ஜலாலுத்தீனிடம் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முடியும். அவரது தொடர்பு எண் 9840269828.

வேறு தேசங்களின் கட்டுரையாளர்கள் தமது கட்டுரைகளை ashroffshihabdeen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

01. தற்கால இலக்கியம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. முஸ்லிம் படைப்பாளிகளின் வலைத்தளப் பதிவுகள்
02. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் கவிதைச் செல்நெறி
03. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைச் செல்நெறி
04. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் நாவல்களும் பேசுபொருளும்
05. 1970 களின் பின்னரான முஸ்லிம் படைப்பாளிகளின் இலக்கியக் கட்டுரைகளும் பேசுபொருளும்

02. இஸ்லாமும் கலைகளும்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01. இலங்கை முஸ்லிம்களின் இசையும் கலைப் பாரம்பரியமும்
02. இலங்கையில் அருகி வரும் முஸ்லிம் பாரம்பரியக் கலை வடிவங்கள்
03. இறைதூதர் காலத்தில் இசையும் கலையும்
04. அடிப்படைவாதச் சிந்தனையும் இஸ்லாமிய இசையும்
05. கஸீதா, புர்தா, தலைப் பாத்திஹா ஆகியவற்றில் இலக்கிய நயம்
06. இஸ்லாமியர் மத்தியில் இசை பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள்

03. சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
கட்டுரைத் தலைப்புக்கள்.
01.) சினிமா ரசனை பற்றிய எண்ணக் கரு
02) இஸ்லாமியக் கருத்தியலை முன்கொண்டு செல்ல சினிமா ஊடகத்தின் பங்களிப்பு
03) சினிமா தொடர்பில் இலங்கையில் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளும் கருத்தியல்சார் பிரச்சினைகள்
04) சினிமா மூலம் இஸ்லாமிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தல்
05) சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை
06.) மாற்றுச் சினிமாவுக்கான தேவைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதைப் பயன்படுத்தலும்

04. எதிரெழுத்து
கட்டுரைத் தலைப்புக்கள்.
01) முஸ்லிம் படைப்பாளிகளின் எதிரெழுத்தில் தொனிக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்
02) முஸ்லிம்களின் எதிர்க்குரல் சர்வதேசத்துக்கு எட்டாமைக்கான காரணிகள்
03) மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள் - சமூக அரசியல் பரிமாணம்
04) சியோனிஸ சக்திகளுக்கெதிரான இஸ்லாமிய எதிர்ப்பிலக்கியம்
05. இஸ்லாமிய தீவிரவாதம் - ஓர் ஆய்வு

05. வாழும் ஆளுமைகள்
கவனத்தைக் கவர்ந்த தற்கால முஸ்லிம் படைப்பாளிகள்
(ஓர் ஆளுமை மேற்குறித்த 5 சிறு தலைப்புக்களின் கீழும் ஆய்வுக்குட்படல் வேண்டும்)
01) அவர்களது ஆளுமையும் தனித்துவமும்
02) அவர்களது சமூகவியற் பார்வை
03) அவர்களது எழுத்துக்களில் இலக்கிய நயம்
04) அவர்களது எழுத்துக்களில் சமூக, இன நல்லுறவு
05) மக்களின் வாழ்வியலை அவர்கள் பேசும் விதம்

06. சமூக நல்லிணக்கம்

கட்டுரைத் தலைப்புக்கள்.
01) சமய இலக்கியங்களில் சமூக நல்லிணக்கம்
02) இன உறவைக் கட்டியெழுப்புவதில் இலக்கியத்தின் பங்களிப்பு
03) தமிழ் பேசும் மக்கள் - ஓர் இலக்கியப் பார்வை
04) மலையக இலக்கியப் பரப்பில் முஸ்லிம் படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்
05) இஸ்லாமும் இலக்கியமும் - இளந்தலைமுறைப் படைப்பாளிகளின் புரிதலும்.

- அஷ்ரப் சிஹாப்தீன் -
இவ்வருடம் நடைபெறும் ''தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா'' நீங்களும் கட்டுரைகளை எழுதலாம். #islam இவ்வருடம் நடைபெறும் ''தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா'' நீங்களும் கட்டுரைகளை எழுதலாம். #islam Reviewed by Madawala News on 8/13/2016 01:55:00 PM Rating: 5