Accaddemy

நாங்கள் ஒன்றும் தர­வ­ரி­சைக்­காக விளை­யா­ட­வில்லை. #Kohli



நாங்கள் தர­வ­ரி­சைக்­காக விளை­யா­ட­வில்லை. எமது கிரிக்­கெட்டை நாங்கள் ஆடு­கிறோம். எந்தப் போட்­டி­யையும் வெற்­றி­கொள்­ளவே எண்­ணு­கிறோம் என்று தொடரின் இந்­திய டெஸ்ட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரி­வித்­துள்ளார்.

இந்­திய  மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்கு இடை­யி­லான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சம­நி­லையில் முடிவடைந்­தது.

இதனால் இந்­தியா 110 புள்­ளி­க­ளுடன் 2ஆ-வது இடத்தைப் பிடித்­தது.

பாகிஸ்தான் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்­றதால் 111 புள்­ளி­க­ளுடன் முதல் இடத்தைப் பிடித்­தது.

5 நாளில் இந்­திய அணி தனது முதல் இடத்தை பறி­கொ­டுத்­தது. இது­கு­றித்து விராட் கோஹ்லி கூறு­கையில் ‘‘கடைசி போட்­டியில் பாகிஸ்தான் வெற்றி பெறா­மலும், இந்­தியா சம­நிலை செய்­தி­ருந்தால் இந்த நிலைமை வேறு மாதிரி இருந்­தி­ருக்கும்.

இரு அணி­க­ளுக்கும் இடையில் உள்ள புள்ளி இடை­வெளி மிகவும்
குறை­வா­கவே இருப்­பதால் இது குறைந்த கால நீடிப்­புதான். ஒரு டெஸ்ட் போட்­டியை வைத்து மட்­டு­மல்ல, ஒரு தொடரை வைத்து நமக்கு நாமே மதிப்­பீடு செய்து பார்க்க வேண்டும்.

எங்­களை விட மற்ற அணிகள் அதி­க­மான போட்­டி­களில் விளை­யா­டி­யுள்­ளன. மற்ற அணி­க­ளுடன் நம் அணியை ஒப்­பிட அதி­க­மான போட்­டி­களில் விளை­யாட வேண்டும்.

தர­வ­ரிசை ஏறும், இறங்கும். நாங்கள் தர­வ­ரி­சைக்­காக விளை­யா­ட­வில்லை. உல­கத்தின் சிறந்த அணியாக வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதுதான் எப்போதும் எங்களது லட்சியம்’’ என்றார்.

நாங்கள் ஒன்றும் தர­வ­ரி­சைக்­காக விளை­யா­ட­வில்லை. #Kohli நாங்கள் ஒன்றும் தர­வ­ரி­சைக்­காக விளை­யா­ட­வில்லை. #Kohli Reviewed by Madawala News on 8/25/2016 10:20:00 AM Rating: 5