Wednesday, August 17, 2016

(வீடியோ இணைப்பு) )KPL T20 இறுதி போட்டியில் ஷிப்லி பாரூக்கினை போட்டு தாக்கிய பிரதி அமைச்சர் அமீர் அலி.

Published by Madawala News on Wednesday, August 17, 2016  | -ஓட்டமாவடி அஹ்மத் இர்ஷாத்-

வீடியோ:- போட்டுத்தாகும் பிரதி அமைச்சர் அமீர் அலி


மாவடத்தில் தன்னை ஒரு இஸ்லாமிய தாயியாக இனம் காட்டிக் கொண்டு அரசியல் செய்ய முற்படும் அரசியல்வாதி ஒருவர் அண்மையில் தான் கலந்து கொண்ட நிகழ்வில் கல்குடா பிரதேசத்தில் ஒரு அமைச்சர் இருந்தும் கல்குடா பிரதேசத்தில் எவ்விதமான அபிவிருத்திகளும் இடம் பெறவில்லை என கவலையோடு பேசியதாக எனக்கு அறியக்கிடைத்தது. அவருக்கு நான் சொல்ல வேண்டு இந்த கல்குடாவில் இருக்கின்ற இளைஞர்கள், தாய்மார்கள் சகோதரிகள் போட்ட பிச்சைதான் தற்பொழுது அவர் கிழக்கு மாகாண சபை கதிரையில் உட்கார்ந்திருக்கும் பதவியாகும் என வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டுக் கழகம் வருடா வருடம் நடாத்தும் கல்குடா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது கிறிக்கட் சுற்று போட்டியின் இறுதி போட்டியில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

மறைமுகமாக பெயர் குறிப்பிடப்படாமல் பிரதி அமைச்சர் அமீர் மேற்கண்டவாறு உரையாற்றினாலும் நேரடியாக அவருடைய வார்த்தைகளானது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கினை பகிரங்கமாக போட்டுத்தாக்கிய விடயமாகவே வெளிப்படையாக தென்பட்டது. அண்மையில் மீராவோடை மாஞ்சோலை வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றிலே பொறியியலாளர் ஷிப்லி பாரூக் கல்குடாவில் அமைச்சர் ஒருவர் இருந்தும் அபிவிருத்திகள் எதுவும் இடம் பெற்றதாக காணவிலை என உரையாற்றியதற்கு பதிலடியாகவே பிரதி அமைச்சர் அமீர் அலியின் உரையானது அமைந்திருந்தனை அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.


மேலும் இறுதி போட்டி நிகழ்வின் பொழுது உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி.. தன்னை இஸ்லாமிய தாயி என்று சொலுகின்ற குறிப்பிட்ட அரசியல்வாதியானவர் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் அவருக்கு இந்த கல்குடா சமூகம் அளித்த வாக்கினாலும் நான் முன்னின்று மூன்று விருப்பு வாக்குகள் அளிக்கின்ற விடையத்தினை மிகக்கச்சிதமாக கையாண்ட படியினாலுமே கிழக்கு மாகாண சபையின் கதிரையில் உட்காரும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது. அவருக்கு அவருடைய சொந்த ஊரிலே கிடைத்தவி ருப்பு வாக்குகளைகளை விடவும் எனக்காக கல்குடாவிலிருந்து அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகளே அதிகமாக இருந்தது மாவடத்தில் சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும்.

குறித்த அரசியல்வாதிக்கு கல்குடாவில் அமைச்சர் இருந்தும் அபிவிருத்தி அடையவில்லை எனும் கருத்தினை கூறுவதற்கு அவர் மாகாண சபை உறுப்பினராகி நான்கு வருடங்கள் எடுத்திருக்கின்றது. அப்படி என்றால் ஏன் அவர் இதற்கு முன்னர் இவ்வாறு பேச வில்லை என்பதே எனது கேள்வியாகும். இவ்வாறு கல்குடா மீது அக்கரையுடன் பேசுகின்றவர் ஒவ்வொரு வருடமும் தனக்கு மாகாண சபையில் கிடைக்கும் நிதியில் இருந்து இருபது இலட்ச்சம் ரூபாய்களையாவது ஒதுக்கி இருந்தார் என்றால் அவர் நான்கு வருடங்களுக்கும் சேர்த்து என்பது இலட்ச்சம் ரூபாய்களை வாக்களித்த கல்குட்டா பிரதேசத்திற்கு ஒதுக்கி இருக்க வேண்டும்.

அவருடைய முகத்தினை தெரியாமல், உருவத்தினை தெரியாமல், அவர் நல்லவராக இருப்பார் என்று நாங்கள் கடந்த காலங்களில் நம்பிக்கை வைத்திருந்தமை வீனாகிபோனதனை கண்கூடாக கண்டு கொண்டோம். அவரை கொண்டு வந்து அறிமுகப்படுத்திய சகோதரர் ஹிஸ்புல்லாவிற்கும் அநியாயமாக நடந்தது கொண்டது மட்டுமல்லாமல் எங்களுடைய கட்சியுடன் இணைந்திருந்த அவர் இறுதியிலே பதவி வெறி பிடித்து, பணத்திற்காக ஓடோடிப்போனவர் கல்குடாவின் அரசியலினையும், அபிவிருத்தியினையும் பற்றி கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது என ஆக்ரோசமான முறையில் கேள்வி எழுப்பினார் பிரதி அமைச்சர் அமீர் அலி.

அது மட்டுமல்லாமல் கல்குடாவை பற்றி யோசிப்பதற்கு போதுமான பணபமுள்ள அரசியல்வாதிகளும், வாக்குபலத்தினை கொண்ட அரசியல்வாதிகளும் கல்குடா பிரதேசத்தில் இருக்கின்றார்கள் என்பதனை நான் அவருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவரை போன்று கபட நாடகமாடி அல்லது அவரை போன்று பணத்திற்கும் வேறு விடயங்களுக்கும் சோறம் போகும் அரசியல்வாதிகளாக நாங்கள் இருக்க போவதில்லை. இவர்களை போன்ற அரசியல்வாதிகளெல்லாம் ஒரு காலத்தில் பூத்து இன்னொரு காலத்தில் அழிந்து போகின்ற அரசியல்வாதிகளாக போவார்களே தவிர நிரந்தரமாக இந்த மாவட்டத்திலே இடம் பிடிக்க முடியாது என்பதனை அவருக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இவ்வாறான காரணத்தினால்தான் இப்பொழுது அவருடைய பிரதேசத்தில் குப்பை அள்ளுவதும் கான்களுக்குள் இறங்குவதும், மண் அள்ளுவதுமாக அரசியல் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்திருகின்றார்.. எனவேதான் எதிர் வருகின்ற வருடம் அவர்களுக்குறிய தேர்தல் வருகின்றது ஆகையால்தான் அவருக்கு கல்குடா அபிவிருத்தி செய்யப்படவில்லை என்ற ஞாபகம் வந்திருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற மாகாண சபை தேர்தலிலே எந்த மாற்றத்தினை இந்த கிழக்கு மண் அடைய போகின்றது என்பதனை பொறுத்திருந்து பாருங்கள். அவர்கள் தலை தூக்கி வைத்த கட்சியினை எப்படி இந்த கிழக்கு மாகாணத்திலிருந்து மக்கள் தூக்கி எறிய காத்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் தெளிவாக பார்க்க போகின்றார்கள்.

இவ்வாறு மறைமுகம் எனும் திரையினூடக பகிரங்கமாக பொறியியலாளர் ஷிப்லி பாருக்கினை போட்டு தாக்கிய பிரதி அமைச்சர் அமீர் அலி இறுதியாக கல்குடா மக்களிடத்தில் எங்களுக்குள்ளே கருத்து மோதல்கள்களையும் பிரச்சனைகளையும், உறுவாக்கி கொண்டு இருப்பவர்களாக நாங்கள் இருக்காமல் எங்களுடைய பிரதேசம், எங்களுடைய மாவட்டம் கல்வி ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும், விளையாட்டு ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் எல்லா விடயங்களிலும், எங்களுடைய பிள்ளைகள் செல்வாக்கு செலுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும் என தான் எப்பொழுது கணவு காண்பதாக தெரிவித்து தனது உரையினை முடித்துக்கொண்டார்.இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top