Oceas

யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது. l



பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இருவரை  உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையிலான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல திருட்டுகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனை அடுத்து  பொலிஸாரினால்  இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முந்தினம் குருநகர் பகுதியில் உள்ள விருந்தினர் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்த  நீர் இறைக்கும் மோட்டர்களை  இவ்விருவரும் இணைந்து திருடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும்  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது களவாடப்பட்ட  நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம்  மீட்கப்பட்டதுடன்

இதன் போது சம்பவத்துடன்  தொடர்புடைய  மற்றுமொரு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை  மேற்படி  நீர் இறைக்கும் மோட்டர் திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதியில் கடந்த காலங்களில் புறா திருட்டுக்களையும் செய்துள்ளதாக  பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் ,கொய்யா தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 18 முதல் 19 வயதுடையவர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Farook sihan




யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது. l யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பதின்ம வயதினர் கைது. l Reviewed by Madawala News on 8/01/2016 07:50:00 AM Rating: 5