நியாயமற்ற கொலைகள் அதிகரிப்பதும் மறுமை நாளின் அடையாளமாகும். l



~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

" அறிவு கைப்பற்றப்படுகின்றவரை, பூகம்பங்கள் அதிகரிக்கின்றவரை,காலம் நெருக்கமாகி சுருங்கும்வரை, பிரச்சினைகள் (சோதனைகள்) வெளியாகும்வரை, அல்ஹர்ஜ் அதிகரிக்கும்வரை, (அல்ஹர்ஜ் என்றால்) அது தான் கொலை கொலையாகும், மற்றும் உங்களிடத்தில் செல்வம் அதிகரித்து நிரம்பி வழிகின்றவரை மறுமை நாள் ஏற்படமாட்டாது."

நூற்கள்: புகாரீ (1036), முஸ்லிம் (157)

عن أبي هريرة رضي الله عنه قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

( لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ ، وَتَكْثُرَ الزَّلَازِلُ ، وَيَتَقَارَبَ الزَّمَانُ ، وَتَظْهَرَ الْفِتَنُ ، وَيَكْثُرَ الْهَرْجُ ، وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ ، حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ )

رواه البخاري (1036) ومسلم (157)

படிப்பினைகள்:

1: மறுமை நாளுக்கு சிறிய பெரிய அடையாளங்கள் உள்ளன, அவை உண்டாகாமல் மறுமை நாள் ஏற்படமாட்டாது.

2: ஆலிம்கள், அறிஞர்கள் மரணிப்பதால் கல்வியறிவு கைப்பற்றப்பட்டு மடமை எங்கும் தலைவிரித்தாடும்.

3: புவி அதிர்வும், பூகம்பங்கள் மற்றும் இவை சார்ந்த அனர்த்தங்கள் நிச்சயம் அதிகரிக்கும்.

4: காலங்கள் மிக வேகமாக உருண்டோடி சுருங்கிவிடும்,ஒரு வருடம் ஒரு மாதத்தைப் போன்றும் ஒரு மாதம் ஒரு வாரத்தைப் போன்றும் ஒரு வாரம் ஒரு நாளைப் போன்றும் ஒரு நாள் ஒரு மணித்தியாலத்தைப் போன்றும் ஒரு மணித்தியாலம் தீப்பொறி மேலெழுந்து அனைவது போன்றும் மிக வேகமாக கடந்துவிடும்.

5: மறுமை நெருங்கும் பொழுது பிரச்சினைகளும் சோதனைகளும் அதிகரிப்பதுடன் கொலைகள் சர்வசாதரணமாகி மலிந்து காணப்படும், அவ்வேளையில் கொலையாளி தான் எதற்காக கொலை செய்தான் என்றும், கொலை செய்யப்பட்டவன் தான் எக்காரணத்திற்காக கொலை செய்யப்பட்டான் என்றும் அறியமாட்டார்கள்.

6: பணம், சொத்து செல்வங்கள் பெருகி ஸகாத் பெறுபவர்கள் யாருமில்லாத நிலை ஏற்பட்டு செல்வந்தர்கள் நிறைந்து ஏழைகள் குறையும் பொழுது மறுமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே வல்லவன் அல்லாஹ் சோதனைகளிலிருந்து எம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
நியாயமற்ற கொலைகள் அதிகரிப்பதும் மறுமை நாளின் அடையாளமாகும். l நியாயமற்ற கொலைகள் அதிகரிப்பதும் மறுமை நாளின் அடையாளமாகும். l Reviewed by Madawala News on 8/25/2016 04:04:00 PM Rating: 5