Friday, August 19, 2016

நேற்று வீடொன்றில் தந்தை, மகள் மற்றும் மகன் சடலமாக மீட்கப்பப்ட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியானது. #lka

Published by Madawala News on Friday, August 19, 2016  | (எம்.எப்.எம்.பஸீர்)

கொட்­டாஞ்­சேனை, சென். பெனடிக் மாவத்தை 70 ஆம் இலக்க தோட்­டத்தில் வீடொன்­றி­லி­ருந்து மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­தி­ருந்த தந்தை, மகள் மற்றும் மகன் ஆகி­யோரின் சடலங்கள் நேற்று மீட்­கப்­பட்­டன. வாசு­தேவன் சிவ­குமார் (வயது 46), தர்­ஷினி (வயது 12), நவீன் அல்­லது நவித்ரன் (வயது 9) ஆகி­யோரின் சட­லங்­களே இவ்வாறு மீட்­கப்பட்­டுள்­ளன. குறித்த இரு பிள்­ளை­க­ளி­னதும் தாயான ஜே. சுதா நேற்றுக் காலை மகனின் பாட­சா­லைக்கு சென்­று­விட்டு வீடு திரும்­பிய போது வீட்டின் ஒவ்­வொரு இடத்தில் இவ்­வாறு குறித்த மூவரும் உணர்­வற்று கிடந்த நிலையில், அவர் கூக்­கு­ர­லி­டவே அய­ல­வர்­களின் உத­வி­யுடன் உட­ன­டி­யாக அவர்கள் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர்.

எனினும் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்படும் போதும் அவர்கள் உயி­ரிழந்த நிலை­யி­லேயே இருந்­த­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் தக­வல்கள் தெரி­வித்­தன.

நேற்று காலை 7.00 மணி­ய­ளவில் ஜே. சுதா எனும் தாய் தனது மகன் இம்­முறை புலமை பரிசில் பரீட்­சைக்கு தோற்றும் நிலையில் அது தொடர்­பி­லான ஆவணம் ஒன்றில் கையெ­ழுத்­திட மகன் கல்வி பயிலும் பம்­ப­ல­பிட்டி பகு­தியின் பிர­பல பாட­சாலை ஒன்­றுக்கு சென்­றுள்ளார். பாட­சாலை விடு­முறை தினம் என்­பதால் வீட்டில் மகன் மற்றும் மகள் ஆகி­யோரும் அவர்­களின் தந்தையுமே இருந்­துள்­ளனர்.

இந் நிலையில் முற்­பகல் 10.30 மணி­ய­ளவில் தாய் மீண்டும் வீட்­டுக்கு வரவே வீட்டின் அறை­யொன்றின் கட்­டிலில் மகனும், பிறிதொரு அறையில் தகப்­பனும் வீட்டின் பிர­தான அறையில் மகளும் உணர்­வற்ற நிலையில் இருந்­துள்­ளனர். இதனைக் கண்ட தாய் உட­ன­டி­யாக கூக்­கு­ர­லி­டவே அருகில் உள்­ள­வர்கள் ஒன்று சேர்ந்து குறித்த மூவ­ரையும் வைத்­தி­ய­சா­லைக்கு உடன் கொண்டு செறுள்­ளனர். எனினும் அதன்­போதும் அவர்கள் மூவரும் உயி­ரி­ழந்தே இருந்­துள்­ளனர்.

இந் நிலையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­திர தில­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி. சில்­வாவின் தலைமை­யி­லான குழு­வொன்றுவிசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.
பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரும் ஸ்தலத்­துக்கு அழைக்­கப்ப்ட்ட நிலையில் குறித்த வீடு முழு­வதும் சல்­லடை போட்டு பொலிஸார் தட­யங்­களைத் தேடினர். இதன் போது வீட்டின் முன் வாச­லுக்கு அருகே இருந்த குப்பை கூடையில் பெக்­கட்டின் மூலை வெட்­டப்பட்ட நிலையில் வெற்று மென்குடிபான பெக்கற் ஒன்றும், வீட்டின் பிர­தான அறை மேசையில் அதே பாணியில் வெட்­டப்­பட்ட பிறி­தொரு வெற்றுப் பெக்­கட்டும் பொலி­ஸாரின் அவ­தா­னத்­துக்கு உட்­பட்­டன. இதனை விட அந்த மேசையில் அலு­மி­னியம் கோப்பை ஒன்றும் பிஸ்கட் வகைகள் காணப்­பட்டுள்ளன.

இத­னை­விட காலை நேர உண­வுக்­காக சைவ உண­வகம் ஒன்றில் வாங்கி வரப்­பட்ட உணவுப் பொதி ஒன்று பிரிக்­கப்பட்டு மூவரும் ஒன்­றாக அமர்ந்து உணவருந்தியமைக்கான அடை­யா­ளத்தைக் காட்டும் வித­மாக எச்­சமும் அந்த மேசையில் இருந்து பொலி­ஸாரால் அவ­த­னிக்­கப்பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் படி, முதலில் குறித்த மூவரும் விஷம் அருந்தி தற்­கொலை செய்­துள்­ள­தா­கவே பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும், எனினும் விசா­ர­ணை­களின் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வாக அதனை உறுதிபடுத்த சாட்­சி­யங்கள் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இது ஒரு மர்ம மரணம் என குறிப்­பிட்டபொலிஸ் அதிகாரி ஒருவர் தமது விசா­ர­ணை­களில் காலையில் சாப்­பிட்­ட­தாக நம்­பப்­படும் குறித்த உனவு தொடர்பில் பாரிய சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை தொடர்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

விசா­ரணை அதி­கா­ரி­களின் தக­வலின் படி , மென் குடிபான பக்­கற்­றுக்­களில் எரும்பு மொய்த்­தி­ருந்­த­தா­கவும் அதனால் அதில் விஷம் கலந்­தி­ருக்க வாய்ப்­பில்லை எனவும் எனினும் காலையில் சாப்­பிட்­ட­தாக நம்­பப்­படும் உணவின் எச்சத்தில் எரும்பு மொய்த்­தி­ருக்­க­வில்லை என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் அவ­தா­னித்­த­தா­கவும் எனவே அது தொடர்பில் அவ­தானம் செலுத்­து­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் தாய் பாட­சா­லைக்கு சென்று மீளவும் வீடு திரும்­பி­யுள்ள நேரத்­துக்குள் மகன் தாய்க்கு தொலை­பேசி அழைப்­பொன்­றினை எடுத்­துள்­ள­தா­கவும் இதன் போது மகன் பேசு­வது தாய்க்கு சரி­யாக கேட்­காமை கார­ண­மாக அவ்­வ­ழைப்பு துண்­டிக்­கப்பட்­ட­தா­கவும் விசா­ர­ணையில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே இந்த மர்ம மரணம் தொடர்பில் கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சில்­வாவின் கீழ் சார்ஜன் ஜயனந்த உள்­ளிட்டகுழுவி­னரால் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

சம்பவ இடத்­துக்கு நேற்று மாலை வருகை தந்த கொழும்பு மேல­திக நீதிவான் நிசாந்த பீரிஸ், தட­யங்­களை மேற்­பார்­வை­யிட்­ட­துடன் மூவ­ரி­னதும் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையும் மன்றில் சமர்­ப்பிக்க உத்­த­ர­விட்டார். அத்­துடன் சம்பவ இடத்தை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்ப்ட்­டுள்­ளது.

கொழும்பு 12, பிரின்சஸ் கேட் பகு­டியை வதி­வி­ட­மாக கொண்ட, சம்­ப­வத்தில் இறந்த மூவர் உள்­ளிட்ட குடும்­பத்­தினர் கடந்த ஒரு வரு­டத்­துக்கு முதல், தமது வீட்டை குத்­த­கைக்கு கொடுத்­து­விட்டு கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்தை - 70 ஆம் இலக்க தோட்­டத்தில் உள்ள குறித்த வீட்டில் வாட­கைக்கு குடி­ய­மர்ந்­துள்­ளனர். கீழ் தளத்தில் வீட்­டு­ரி­மை­யாளர் இருக்­கவே மேல் மாடியில் இவர்கள் குடி­யி­ருந்­துள்­ளனர்.

குடும்­பத்­த­லை­வ­னான மர்­ம­மாக இறந்­துள்ள 46 வய­து­டைய வாசு­தேவன் சிவ­குமார் கொட்­டாஞ்­சேனைப் பகு­தியில் கைய­டக்கத் தொலை­பேசி வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­பவர் எனவும் வெளி நாடு­க­ளுக்கு செறு கைய­டக்கத் தொலை­பே­சிக்ளை அவர் கொன்டு வரு­வ­தா­கவும் அவ­ரது குடும்­பத்தார் தெரி­வித்­தனர்.
ஆரம்­பத்தில் சில கடன் பிரச்சினை இருந்ததாகவும் எனினும் பின்னர் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கும் குடும்பத்தார் அவர் சந்தோசமாகவே வாழ்ந்து வந்ததாகவும் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு காரணங்கள் இருக்கவில்லை என்வும் தெரிவித்தனர்.

இந் நிலையில் தற்கொலையை விட உணவு விஷமானதால் இந்த மர்ம மரணங்கள் இடம்பெற்றதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய பிரத்தியேக விசாரணைகள் இடம்பெறுகின்றன. சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top