Oceas

நேற்று அதிர்வலைகளை ஏற்படுத்திய இருவர் பலியான யானை தாக்குதல்... யானை மீது மோதியதாலே புரட்டி எடுத்தது. #lka



எம்.எஸ்.முஸப்பிர்-

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கன­டா­வுக்கு பய­ணிக்­க­வி­ருந்­த­வர்­களை வழி­ய­னுப்­பு
வ­தற்­காக கட்­டு­நா­யக்க விமான நிலை யம் நோக்கி பய­ணித்த வேன் ஒன்றை புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதியில் நேற்று அதி­காலை காட்டு யானை ஒன்று தாக்­கி­யதில் அதில் பய­ணித்த இருவர் பலி­யா­ன­துடன் ஒன்­பது பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனது நேற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது அறிந்ததே.

குறித்த வேன் வீதியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது வீதி­யோரம் நின்­று­ கொண்­டி­ருந்த காட்டு யானை மீது மோதியதையடுத்து சினம் கொண்ட அந்த யானை வேனைத் தாக்கி புரட்டி எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனால் வேன் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் அதில் பய­ணித்­த­வர்­களும்
பெரும் பீதிக்குள்ளாகி­யுள்­ளனர்.

கரு­வ­ல­கஸ்­வெவ பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புத்­தளம் -அநு­ரா­த­புரம்
வீதியின் மீஓயா பாலத்­திற்கு அரு­கா­மையில் வைத்தே புத்­தளம் திசையில் பய­ணித்த மேற்­படி வேன் மீது காட்டு யானை ஒன்று தாக்­குதல் மேற்­கொண்­டுள்­ளது. இதனால் அதில் பய­ணித்த சிறு குழந்தை உட்­பட இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கரு­வ­ல­கஸ்­வெவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று சனிக்­கி­ழமை அதி­காலை 2.20 மணி­ய­ள­வி­லேயே இவ்­வ­னர்த்தம் இடம்­பெற்­றுள்­ள­துடன் வேனில் பய­ணித்த மேலும் 9 பேர் காயங்­க­ளுக்­குள்­ளாகி புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

காட்டு யானையின் தாக்­கு­தலில் பலத்த காயங்­க­ளோடு புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பருத்­தித்­துறை வீதி, யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த வேலா­யுதன் நிமல்ராஜ் எனும் 39 வய­து­டைய நபர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பலத்த காயங்­க­ளுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்த 5 வயது சிறு­மியும் பின்னர் அங்கு வைத்து உயி­ரி­ழந்­துள்ளார்.

மேலும் காயங்­க­ளுக்­குள்­ளான நான்கு பெண்கள் மற்றும் 3 ஆண்­களும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் இரு சிறு­வர்­களும் சிறு காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவர்­களுள் வேனின் சார­தியை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­று­வ­தற்கு நேற்று பகல் நட­வ­டிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று பகல் புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று அதிர்வலைகளை ஏற்படுத்திய இருவர் பலியான யானை தாக்குதல்... யானை மீது மோதியதாலே புரட்டி எடுத்தது. #lka நேற்று அதிர்வலைகளை ஏற்படுத்திய இருவர் பலியான யானை தாக்குதல்... யானை மீது மோதியதாலே புரட்டி எடுத்தது. #lka Reviewed by Madawala News on 8/28/2016 10:17:00 AM Rating: 5