Free Space

நேற்று ஒன்­றரை கோடி ரூபா ஹெரோ­யினுடன் சிக்கியவர் விபரம் மற்றும் அவரது பின்னணி வெளியானது. #lka



(எம்.எப்.எம்.பஸீர்)

பிர­ப­ல­மான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநி­யோ­கத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வரும் அவ­ரது கையாள் ஒரு­வரும் வெள்­ள­வத்­தையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீ­வவின் ஆலோ­ச­னைக்கு அமைய கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றுக்கும் விசா­ர­ணையில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட தகவல் ஒன்­றுக்கும் அமை­வாக முன்­னெ­டுக்­கப்பட்ட சிறப்பு நட­வ­டிக்­கை­களின் போதே, வெள்­ள­வத்தை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது இவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

நேற்று காலை 7.40 மணி­ய­ளவில் வெல்­லம்­பிட்­டி, ‍வெள்ள­வத்தை பகு­தியில் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கையில் 25 கிராம் ஹெரோ­யினை உடன் வைத்­தி­ருந்த ஒருவர் கைது செய்­யப்பட்­ட­தா­கவும் அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களின் பல­னா­கவே வெள்­ள­வத்­தையில் வைத்து சிறப்பு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்து சந்­தேக நபர்­களைக் கைது‍செய்­த­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குணசே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்த கைதி­னை­ய­டுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களில் பிர­தான கடத்தல் காரர், பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் சுட்­டுக்­கொல்­லப்பட்ட பிர­பல போதைப் பொருள் கடத்தல் மன்னன் பெரோஸ் என்­ப­வரின் சகோ­த­ர­ரான 45 வய­து­டைய நீர்­கொ­ழும்பு - கொச்­சிக்­கடை பகு­தியைச் சேர்ந்த நவாஸ் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் அவரின் உத­வி­யா­ள­ராக செயற்­பட்­டவர் 24 வய­து­டைய யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் என்­பதும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

பிர­பல போதைப் பொருள் கடத்தல் மன்­னர்­க­ளான மொஹம்மட் சித்திக், வெலே சுதா, மாத்­தறை மதூஸ் மற்றும் பொடி சுது ஆகி­யோரின் போதைப் பொரு­ளி­னையே சந்­தேக நபர்கள் நாட­ளா­விய ரீதியில் விநி­யோ­கித்தது தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் பிர­தான சந்­தேக நப­ரான நவாஸ், தனது யாழ். உத­வி­யாளர் ஊடாக குறித்த ஹெரோயின் போதைப் பொருளை யாழ். பகு­திக்கு தடையின்றி விநியோ­கித்து வந்­துள்­ளமை தொடர்­பிலும் தகவல் கிடைத்­துள்­ள­துடன், நேற்று கைது செய்­யப்­படும் போது எடுத்துச் செல்­லப்பட்­டுக்­கொண்­டி­ருந்த ஒன்­றரை கோடி ரூபா பெறு­ம­தி­யான ஒன்­றரை கிலோ ஹெரோ­யினும் கூட யாழ். பகு­திக்கு விநி­யோ­கிக்­கப்­பட தயார் நிலையில் இருந்­ததா எனவும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

சந்­தேக நபர்கள் இன்று நீதி­மன்றில் ஆஜர்‍ செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில், மேல­திக விசா­ர­ணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்­கவின் மேற்­பா­ர்வையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹிரியாதாஸவின் கீழ், பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கயந்த உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று ஒன்­றரை கோடி ரூபா ஹெரோ­யினுடன் சிக்கியவர் விபரம் மற்றும் அவரது பின்னணி வெளியானது. #lka நேற்று ஒன்­றரை கோடி ரூபா ஹெரோ­யினுடன் சிக்கியவர் விபரம் மற்றும் அவரது பின்னணி வெளியானது. #lka Reviewed by Madawala News on 8/23/2016 10:31:00 AM Rating: 5