Oceas

அர­சாங்­கத்­திற்கு மகிந்த தரப்பு நன்றி சொல்ல வேண்டும். #lka



நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நாட்டில் வாழு­கின்ற சக­ல­ரி­னதும் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு சுதந்­தி­ர­மான சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. இதன்­ கா­ர­ண­மா­க­வேதான் கூட்டு எதி­ர­ணி­யி­னரால் பாத­யாத்­தி­ரையை தடை­யின்றி மேற்­கொள்ள முடிந்­தது. ஆகவே, இச்­சூ­ழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த அர­சாங்­கத்­திற்கு அவர்கள் நன்­றிக்­கடன் செலுத்­த­வேண்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ­ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

கடந்­த­கா­லத்தில் ஆட்சி செய்த எந்­த­வொரு ஜனா­தி­ப­தி­யாலும் ஒழிக்க முடி­யாத நிறை­வேற்று அதி­கா­ர­மு­றையை திருத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மக்­களின் எதிர்­பார்­ப்பினை நிறை­வேற்­றினார்.

தற்­போது சுயா­தீன குழுக்கள் பல உரு­வாக்­கப்­பட்டு முறை­யான விதத்தில் சேவைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­த­வ­கையில் தேர்­தல்கள் சுயா­தீ­ன­மாக நடை பெறு­கின்ற அதே­வேளை மக்­க­ளது பிரச்­சி­னை­களை முறை­யி­டு­வ­தற்கும் அதன் மூலம் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் தனி­யான குழுக்கள் இயங்­கு­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி ஆட்­சிக்­கா­லத்தில் ஊட­கங்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்­தன. ஆனால், தற்­போது அந்­நிலை முற்­றாக மாற்றம் பெற்­றுள்­ளது. சாதா­ரண மக்­க­ளுக்கும் விட­யங்­களை அறிந்து கொள்­வ­தற்கு தகவல் அறியும் சட்­டத்தின் மூலம் அதற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்ளோம்.

இவ்­வாறு நாட்டு மக்­க­ளது தேவை­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் தொட ர்ந்தும் நிறை­வேற்றும் நல்­லாட்­சியை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்­களே தற்­போது இவ்­வாட்­சிக்­கெ­தி­ராக பாத­யாத்­தி­ரை­யையும் போராட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­வா­றான போராட்­டங்கள் மீது கடந்த கால அர­சாங்கம் எவ்­வா­றான அடக்­கு­மு­றை­களை கையாண்­டது என்­பதை எல்­லோ­ராலும் காண முடிந்­தது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கமோ மக்­க­ளது உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்­த­மை­யி­னா­லேயே அத்­த­கைய போராட்­டங்­க­ளுக்கு இட­ம­ளித்­தது மட்­டு­மல்­லாமல் தீர்வு வழங்க வேண்­டிய கோரிக்­கை­களை நிறை­வேற்­றியும் வரு­கின்­றது.

இத­னால்தான் கண்டியில் ஆரம்பித்த கூட்டு எதிர்க்கட்சியினரின் பாதயாத்தி ரையை கொழும்புவரை மேற்கொள்ள இடமளித்தது. இதற்காக கூட்டு எதிர்க் கட்சியினர் நல்லாட்சிக்கு நன்றிகூற கட மைப்பட்டுள்ளனர் என்றார்.
அர­சாங்­கத்­திற்கு மகிந்த தரப்பு நன்றி சொல்ல வேண்டும். #lka அர­சாங்­கத்­திற்கு மகிந்த தரப்பு நன்றி சொல்ல வேண்டும். #lka Reviewed by Madawala News on 8/10/2016 11:03:00 AM Rating: 5