Accaddemy

யுவதியை கடத்திய யுவதி பிர­தே­ச­வா­சி­களால் மடக்கிப் பிடிப்பு... இலங்கையில் இந்த அவலம். #lka



ஹெட்டிபொல பிர­தே­சத்தில் 20 மற்றும் 15 வய­தான இரு யுவ­தி­க­ளி­டையே ஏற்­பட்ட அப­ரி­மி­த­மான காதலின் விளை­வாக இரு­பது வய­தான யுவதி மற்­றைய யுவ­தியை முச்­சக்­கர வண்டி  ஒன்றில் கடத்திச் செல்ல முயற்­சித்த போது  யுவதி உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் மூவர் பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்டு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­விரு யுவ­திகள் இரு­வரும் உற­வி­னர்கள் எனவும் இரு­வ­ரி­டையே மிக நீண்ட நாட்­க­ளாக நிலவி வந்த காத­லை­ய­டுத்து, வென்­னப்­புவ பிர­தே­சத்தை சேர்ந்த 20 வய­தான யுவதி தனது நண்பி ஒரு­வ­ருடன் இணைந்து முச்­சக்­கர வண்டி ஒன்­றினை வாட­கைக்கு அமர்த்தி, பல­வந்­த­மாக மேற்­படி 15 வய­தான யுவ­தியைக் கடத்தி செல்ல முற்­பட்ட போதே இவ்­வாறு பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேற்­கு­றிப்­பிட்ட 20 வய­தான யுவதி ஆண்கள் போன்று தலை­மு­டியை அலங்­கா­ரப்­ப­டுத்திக் கொண்டு, ஆண்கள் அணியும் உடை­களை அணிந்து எப்­போது ஆண் ஒரு­வரை போன்றே தோற்­ற­ம­ளித்­துள்­ள­துடன் சிகரெட் மற்றும் மது­பா­னங்­க­ளையும் உப­யோ­கித்து வந்­துள்ளார்.

ஹெட்­டி­பொ­லவில் வசிக்கும் தனது உற­வி­ன­ரான 15 வய­தான சிறு­மியின் வீட்­டுக்கு சென்ற  இந்த யுவதி சிறிது காலம் அங்கு தங்­கி­யி­ருந்த போது இரு­வ­ருக்­கு­மி­டையே ஒரு வகை­யான ஈர்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

எனினும் வென்­னப்­பு­வயை சேர்ந்த (20 ) யுவ­தியின் நடத்­தையை விரும்­பாத சிறு­மியின் வீட்டார் அவரை அங்­கி­ருந்து அனுப்­பி­ய­தோடு, மறு­ப­டியும் .இங்கே வர­வேண்டாம் என எச்­ச­ரித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, அங்­கி­ருந்து புறப்­பட்டு வீடு சென்ற யுவதி, 18 வய­தான  நண்பி ஒரு­வரை அழைத்துக் கொண்டு தனக்கு  தெரிந்த முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் ஹெட்­டி­பொ­ல­வுக்கு சென்று தனது காத­லி­யான 15 வயது சிறு­மியை பல­வந்­த­மாக அழைத்­து­வர முயற்­சித்­துள்ளார்.

அதன்­போதே குறித்த யுவ­தியும் அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்த நண்­பியும் முச்­சக்­க­ர­வண்டி சார­தியும் பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்பட் பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர்.

இந்த இரு யுவ­தி­களின் வீடு­களில் இருந்தும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் பரிமாற்றிக் கொண்ட பல காதல் கடிதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை ஹெட்டிபொல நீதிவான் மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுவதியை கடத்திய யுவதி பிர­தே­ச­வா­சி­களால் மடக்கிப் பிடிப்பு... இலங்கையில் இந்த அவலம். #lka யுவதியை கடத்திய யுவதி பிர­தே­ச­வா­சி­களால் மடக்கிப் பிடிப்பு... இலங்கையில் இந்த அவலம். #lka Reviewed by Madawala News on 8/18/2016 11:13:00 AM Rating: 5