Accaddemy

அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகிறது. அவற்றை விசாரிக்கவும். #lka



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கட்சியின் தலைமைக்காரியாலையமான தாருஸ்ஸலாம் போன்று 10 கட்டிடங்களை நிர்மாணிக்குமளவுக்கு சொத்துக்கள் காணப்படுவதாக அக்கட்சியின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எம்.ஹரீஸ் பொதுக்கூட்டமொன்றில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை அம்பாறையை சேர்ந்த எம்.ஆர், பாயிஸ் என்பவர் அனுப்பியுள்ளார்.

பிரதியமைச்சரின் கூற்றை மேற்க்கோள் காட்டி அமைச்சர் ரவுப் ஹக்கீமின் சொத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு 12 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 20ம் திகதியிடப்பட்ட அக்கடிதத்தில் முஸ்லிம் காங்கிரசின் 2005ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டுவரையான காலப்பகுதியின் கணக்கறிக்கை தொடர்பாகவும் வினவப்பட்டுள்ளது.

குறித்த கணக்கறிக்கை உறுதிப்படுத்தப்பட்டு முஸ்லிம் காங்கிரஸினால் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் வினவப்பட்டுள்ளது.
கல்முனையில் இடம்பெற்ற பிரதியமைச்சரின் குறித்த உரையில், தேர்தல்களில் போட்டியிடும்போதும் கட்சியின் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்போதும் செலவுகளுக்கு உண்டியலில் நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை, இவ்வாறான பாரிய செலவுகளை கட்சியின் தலைவரே ஏற்றுக்கொண்டார் என பிரதியமைச்சர் தெரிவித்ததாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கடன்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும், கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தேரல்களில் போட்டியிடுவதற்கு முன்பும் பின்பும் அதன் சொத்துக்களையும் கடன்களையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் வினவப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்தது போன்று ஹக்கீம் சொத்துக்களையும் கடன்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்காவிடின் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் கேள்வியேபப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்படுமா என்று கேள்வியெழுப்பட்டுள்ளதுடன் விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. DC
அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகிறது. அவற்றை விசாரிக்கவும். #lka அமைச்சர்  ரவுப் ஹக்கீமிடம் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகிறது. அவற்றை விசாரிக்கவும். #lka Reviewed by Madawala News on 8/25/2016 11:27:00 AM Rating: 5