Oceas

பொறுமையிழந்த ஜனாதிபதிக்கு ஐ.தே.க வாழ்த்து. #lka



(ப.பன்­னீர்­செல்வம்)

துரோ­கி­களை களை­யெ­டுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முயற்­சி­க­ளுக்கு ஐ.தே. கட்சி ஆத­ர­வ­ளிக்கும் என பிர­தி­ய­மைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார்.

ஊழல் மோசடிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் வெற்றி பெற வாழ்த்­துக்கள் என்றும் பிர­தி­ய­மைச்சர் குறிப்­பிட்டார்.
தேசிய அரசின் ஒரு வருட பூர்த்தி விழா மாத்­த­றையில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன் ­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால புதிய கட்சி ஆரம்­பிப்­ப­வர்­க­ளுக்கு கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இது தொடர்­பாக கேட்ட போதே மின்­சக்தி மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க மின் வலு பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக பிர­தி­ய­மைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரி­விக்­கையில்,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பொறுமை எல்லை தாண்­டி ­விட்­டது. ஜன­நா­யக ரீதியில் ஜனா­தி­பதி அர­சியல் சுதந்­தி­ரத்தை வழங்­கினார். ஆனால் அந்த சுதந்­திரம் மீறப்­பட்டு “துரோகம் இழை க்கும்” நிலைக்கு உயர்ந்து விட்­டது.

தாம் சார்ந்த கட்­சியை உள்­ளுக்­குள்­ளேயே இருந்து கொண்டு கறை­யா­னைப்போல் அரிப்­ப­தற்கு எந்தத் தலைவர் தான் வாய்ப்பு வழங்­குவார்?
எனவே ஜன­நா­யக அர­சியல் சுதந்­தி­ரத்தை “துரோகத் தனத்­திற்­காக” பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி பொறு­மை­யி­ழந்து நட­வ­டிக்­கை­களை எடுக்கும் பயணத்தை ஆரம்­பித்­து­ விட்டார்.

துரோ­கி­க­ளுக்கு எதி­ரான, ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் பூரண ஆத­ரவு வழங்­குவோம். அத்­தோடு ஜனா­தி­ப­தியின் முயற்­சிகள் வெற்றி பெற எமது வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

அதேவேளை தற்போதைய ஆட்சியிலும் ஏதாவது ஊழல் மோசடிகளில் ஈடுபட் டாலும் தயவு தாட்சண்யம் காட்டப்படாது என்ற ஜனாதிபதியின் கருத்தையும் வர வேற்கின்றேன் என்றார்.

பொறுமையிழந்த ஜனாதிபதிக்கு ஐ.தே.க வாழ்த்து. #lka பொறுமையிழந்த ஜனாதிபதிக்கு ஐ.தே.க வாழ்த்து. #lka Reviewed by Madawala News on 8/22/2016 11:30:00 AM Rating: 5