Kidny

Kidny

மொஹம்மட் முஸம்மில் பிணையில் விடு­தலை செய்யப்பட்டது ஏன்? காரணம் இதுதான். #lka(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனா­தி­பதி செய­ல­கத்தின் வாக­னங்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்தி அரச சொத்­துக்­க­ளுக்கு 71 இலட்சம் ரூபா நட்­டத்தை ஏற்­ப­டுத்­திய குற்றச்சாட்டு தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் இருந்து வந்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப்பேச்­சாளர் மொஹம்மட் முஸம்மில் நேற்று பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டார்.

கொழும்பு – - கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

முஸம்­மிலின் 6 வயது பிள்­ளையின் மனநிலையில், தந்தை அருகில் இல்­லா­ததால் பாரிய தாக்கம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், முஸம்மில் தொடர்ந்து பிள்­ளையை விட்டுப் பிரிந்­தி­ருக்கும் நிலையில் அப்­பா­திப்­பா­னது அதி­க­ரிக்கும் எனவும் வைத்­திய அறிக்­கைகள் ஊடாக மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, அதனை விஷேட கார­ண­மாக கரு­தியே நீதிவான் லங்கா ஜய­ரத்ன பிணை வழங்க தீர்­மா­னித்தார்.

நேற்­றைய தினம் இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றது. இதன்­போது சந்­தேகநப­ராக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹம்மட் முஸம்மில் சிறை அதி­கா­ரிகள் ஊடாக மன்றில் ஆஜர்செய்­யப்­பட்டார். அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கபில கமகே மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன், ஜனா­தி­பதி செய­லக வாக­னங்­களை மோசடி செய்த விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்யும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்னாண்­டோவும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மான போது நீதிவான் லங்கா ஜய­ரத்ன, கடந்த தவணை சந்­தேக நபர் தரப்பால் முன்­வைக்­கப்­பட்ட 2 ஆவது எழுத்து மூல பிணைக் கோரிக்கை மீதான தீர்ப்பை அறி­வித்தார்.

'இன்று இந்த வழக்கு பிணைக் கோரிக்கை மீதான தீர்ப்பை அறி­விக்க எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. கடந்த தவணை சந்­தேக நபர் சார்பில் எழுத்துமூலம் முன்­வைக்­கப்­பட்ட பிணைக்கோரிக்கை தொடர்பில் இந்த மன்று அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழும் மோசடி, நம்­பிக்கை துரோகம் உள்­ளிட்ட குற்றச்சாட்­டுக்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 5 (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­டனை சட்டக் கோவையின் 100,386,389,400 ஆகிய பிரி­வு­களின் கீழும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும் சந்­தேக நப­ருக்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.

பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 17 ஆம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம் அச்­சட்­டத்தின் கீழ் முன்­வைக்­கப்­படும் குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு பிணை வழங்க முடி­யாது. எனினும் பிணை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய அத்­த­கைய குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் விஷேட கார­ணி­களை கருத்தில் கொண்டு பிணை வழங்க முடியும்.

இந் நிலையில் சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணியால் பிணைக் கோரிக்­கையை வலுப்­ப­டுத்த பல வழக்குத் தீர்ப்­புக்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. ருவன் குண­சே­கர எதிர் ரவி கரு­ணா­நா­யக்க, மொஹம்மட் சியாம் எதிர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்­ப­தி­காரி, அனு­ரத்த ரத்­வத்த எதிர் சட்ட மா அதிபர், திலங்க சும­தி­பால எதிர் பொலிஸ் மா அதிபர், தட்­சா­யிணி எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்­கு­களின் வழக்குத் தீர்ப்­புகள் சந்­தேக நப­ருக்கு பிணை வழங்க ஆத­ர­வாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. எனினும் அவற்றை இவ்­வ­ழக்கில் சந்­தேக நப­ருக்கு சாத­க­மான விட­யங்­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
எவ்­வா­றா­யினும், இந்த பிணைக் கோரிக்­கை­யா­னது பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 8 (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் ஆரா­யப்­ப­டு­கின்­றது. அசா­தா­ர­ண­மான அல்­லது விஷேட நிலை­மைகள் தொடர்பில் இங்கு ஆரா­யப்­ப­டு­கின்­றது. விஷேட விட­யங்கள் அல்­லது நிலை­மைகள் என்ற பதத்­துக்கு வரை­வி­லக்­கணம் பிரே­ம­ரத்ன எதிர் சட்ட மா அதிபர் வழக்கில் உயர் நீதி­மன்ற தீர்ப்பில் கூறப்­பட்­டுள்­ளது. அதன்­படி குறித்த சந்­தர்ப்ப சூழ்­நி­லை­மை­க­ளுக்கு அமைய விஷேட விட­யங்கள் மாறு­ப­டலாம்.

இந் நிலையில் ஏற்­க­னவே சந்­தேக நபரால் முன்­வைக்­கப்­பட்ட முதல் பிணை கோரிக்­கையில் தனது முத­லா­வது பிள்ளை சரும நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டது.

அது குறித்த வைத்­தி­யர்­களின் அறிக்­கையில் அப்­பிள்­ளைக்கு தாயின் அர­வ­ணைப்பு போது­மா­னது என சுட்­டிக்­காட்­டப்­பட்­டதால் அப்­போது அதனை இம்­மன்று விஷேட நிலை­மை­யாக ஏற்­றுக்­கொள்ள மறுத்­தது.

எனினும் தற்­போது செய்­துள்ள பிணை கோரிக்­கையில் 6 வய­தான சந்­தேக நபரின் பிள்ளை சுவாச கோளா­றினால் பாதிக்­கப்­ப­டு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மன்­றுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­களில் இப்­பிள்­ளையின் அருகே தாயும் தந்­தையும் இருக்கவேண்டும் என கோரப்­பட்­டுள்­ளது. குறித்த பிள்ளை கடந்த ஜூன், ஜூலை மாதங்­களில் சிகிச்சை பெற்­றுள்­ளது.

சிறுவர் தொடர்­பி­லான விஷேட வைத்­திய நிபுணர் அஜித்தின் அறிக்­கையின் பிர­காரம், குறித்த பிள்ளை தந்தை அருகில் இல்­லாமை கார­ண­மாக மன­த­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலைமை தொட­ரு­மானால் பிள்ளை பல­வீ­ன­ம­டையும் எனவும் மான­சீக தாக்கம் அதி­க­ரிக்கும் எனவும் அதில் கூறப்­பட்டு அவர் ஊடா­கவே மேல­திக சோத­னை­க­ளுக்­காக குழந்­தைகள் மன நல விஷேட வைத்­திய நிபுணர் ஹேம­பால பெரே­ராவின் பரி­சோ­த­னைக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ரது அறிக்­கையும் மன்றில் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரது அறிக்­கையில் குறித்த பிள்ளை இள­கிய மன­தினைக் கொண்­டது எனவும் மன ரீதி­யாக பாதிப்­ப­டையும் சந்­தர்ப்­பங்கள் அதி­க­மாக உள்­ளது எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பிள்­ளைக்கு வயது ஆறரை வரு­டங்­களே ஆகும் நிலையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடி­யாது என மன்­றுக்கு விளங்­கு­கின்­றது. எனவே அம்மா, அப்பா இரு­வரும் அப்­பிள்ளை அருகில் இருக்க வேண்டும் என கருதும் இந்த மன்று அதனை விஷேட கார­ணி­யாகக் கருதி சந்­தேக நப­ருக்கு பிணை வழங்­கு­கின்­றது.

அதன்­படி 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப்பிணை­களில் செல்ல சந்­தேக நப­ருக்கு மன்று அனு­ம­திக்­கின்­றது. அத்­துடன் அவ­ரது கடவுச்சீட்டு மன்றில் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதும் வெளி­நாட்டு பய­ணமும் தடை செய்­யப்­ப­டு­கின்­றது. சந்­தேக நபர் தனது நிரந்­தர வதி­வி­டத்தை ஒரு வாரத்­துக்குள் கிராம சேவ­கரின் உறு­தி­யுடன் இம்­மன்­றுக்கு இடை­யீட்டு மனு­வூ­டாக சமர்ப்­பிக்க வேண்டும் என அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்னாண்டோ மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்­ப்பித்தார்.

கனம் நீதிவான் அவர்­களே, இந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வ­டை­ய­வில்லை.' என்றார். இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த விவ­கா­ரத்தில் வேறு யாரை­யேனும் கைது­செய்ய உள்ளதா என வினவினார். இதற்கு பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ, ' ஆம் நீதிவான் அவர்களே, 6 பேர் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி தற்சமயம் விசாரணை நடத்துகின்றோம்.

சந்தேக நபரின் சாரதியிடமும் நாம் வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் போலியானதா உண்மையானதா என்பதைக் கண்டறிய அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளோம்.

சந்தேக நபருக்கு வாகனங்களை வழங்கிய விவகாரத்துடன் தொடர்புடைய ஜனாதிபதி செயலகத்தின் 6 பேர் குறித்தும் விசாரணை நடத்துகின்றோம்' என்றார்.

இதனையடுத்து வழக்கை நீதிவான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

மொஹம்மட் முஸம்மில் பிணையில் விடு­தலை செய்யப்பட்டது ஏன்? காரணம் இதுதான். #lka மொஹம்மட் முஸம்மில்  பிணையில் விடு­தலை செய்யப்பட்டது ஏன்? காரணம் இதுதான். #lka Reviewed by Madawala News on 8/11/2016 10:42:00 AM Rating: 5