Oceas

அளுத்கம - குரு­ணாகல் பெளத்த பிக்குகள் மோதல். #lka



பிரித் நிகழ்­வொன்றில் பிக்கு ஒருவர் தன்னை தாக்­கி­ய­தாக தெரி­வித்து குருணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த பிக்கு ஒருவர் கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பிலி­யந்­தலை, ஹோகந்­தர பிர­தே­சத்தில் இடம்­பெற்ற பிரித் போதனை நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டி­ருந்த போதே தான் இவ்­வாறு தாக்­கப்­பட்­ட­தாக தாக்­கு­த­லுக்கு இலக்­கான பிக்கு தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னவர் குரு­ணாகல் பிர­தேச விகாரை ஒன்றை சேர்ந்த 55 வய­தான பிக்கு ஒருவர் என தெரிய வந்­துள்­ளது. பிலி­யந்­தலை ஹோகந்த பிர­தே­சத்­துக்கு பிரித் போதனை நிகழ்­வொன்­றுக்­காக இப்­பிக்கு சென்­றி­ருந்த நிலையில் அளுத்­கம பிர­தே­சத்தில் இருந்து வந்து அந்­நி­கழ்­வு­களில் கலந்து கொண்டு மேற்­படி பிக்­கு­வுடன் இணைந்து பிரித் போத­னை­களை நிகழ்த்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அதன்­போது தான் உரிய முறையில் அனுஷ்­டா­னங்­களை செய்­ய­வில்லை என தெரி­வித்து, அளுத்­து­க­ம­வி­லி­ருந்து வந்­தி­ருந்தவர் பிரித் மண்­ட­பத்தில் வைத்து தன்னை சாடி­ய­தாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இந்த பிரித் நிகழ்­வு­களின் பின்னர் ஓய்­வெ­டுப்­ப­தற்­காக ஒழுங்­குப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தங்கும் அறை­யினுள் மேற்­கு­றித்த சம்­ப­வத்­தினை முன்­னி­லை­ப­டுத்த ஏற்­பட்ட வாக்­கு­வாதம் முற்­றி­யதில் அளுத்­க­ம­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த இளம் பிக்கு ஒருவர் குரு­ணாகல் பிக்­குவை தாக்க முற்­பட்ட வேளையில், ஏற்­க­னவே அவ­ருடன் கோபத்­தி­லி­ருந்த அளுத்­கம பிக்கு அவரின் கழுத்தை பிடித்து தள்­ளி­யுள்ளார்.

இதன்­போது போது கீழே வீழ்ந்த தன்னை அளுத்­கம பிக்கு காலால் உதைத்­த­மை­யினால் தான் பாதிக்­கப்­பட்டு கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக அந்த பிக்­கு

தெ­ரி­வித்­துள்ளார். இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம - குரு­ணாகல் பெளத்த பிக்குகள் மோதல். #lka அளுத்கம - குரு­ணாகல் பெளத்த பிக்குகள் மோதல். #lka Reviewed by Madawala News on 8/05/2016 09:16:00 PM Rating: 5