Accaddemy

(படங்கள் இணைப்பு) மூன்று வீடுகள் தீயில் எரிந்து நாசம். #lka



நல்லதண்ணி – லக்ஷபான தோட்ட குடியிருப்பில் நேற்று (06) இரவு 09.30 அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இரண்டு அல்லது மூன்று  வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதனையடுத்து, இந்த வீடுகளில் குடியிருந்த  குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது, வீட்டில் யாரும் இல்லை எனவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் வீட்டில் இருந்த பெருமளவிலான உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை, இது தொடர்பாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.
1
2
3
4
5
6
8
9
12


10





(படங்கள் இணைப்பு) மூன்று வீடுகள் தீயில் எரிந்து நாசம். #lka (படங்கள் இணைப்பு) மூன்று வீடுகள் தீயில் எரிந்து நாசம். #lka Reviewed by Madawala News on 8/07/2016 08:40:00 AM Rating: 5