Free Space

கேஸ் பாரம்.. கெஹெலிய ரம்புக்வெல்ல மைத்ரி அணியில்.... #lka



முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுமதியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாவை பணத்தை மோசடியாக பெற்றதாக கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் முடிவடைந்துள்ளது.

மோசடி நடந்துள்ளதை சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இதுவே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கெஹெலிய தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அப்போது அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்ததுடன் அவர் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகம் அனைத்து மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்படியான நிலையில், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாவை பெற்றதன் மூலம் மோசடி செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் நோய்களின் போது மருத்துவச் செலவுக்கு பணத்தை தேடிக்கொள்ள முடியாத வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள் சீர்குலைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. D  C
கேஸ் பாரம்.. கெஹெலிய ரம்புக்வெல்ல மைத்ரி அணியில்.... #lka கேஸ் பாரம்.. கெஹெலிய ரம்புக்வெல்ல  மைத்ரி அணியில்.... #lka Reviewed by Madawala News on 8/11/2016 03:59:00 PM Rating: 5