Oceas

இஸ்ரேலில் தஞ்சம் கேட்கும் இலங்கையர்கள். #lka



(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளி­நா­டு­களில் தொழிலில் இருக்கும் எவ­ருக்கும் அர­சியல் தஞ்சம் வழங்­கக்­கூ­டாது. சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அர­சியல் தஞ்சம் எந்­த­வ­கை­யிலும் பொருந்­தாது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

 இஸ்­ரேலில் தொழி­லுக்­காக பதி­வு­செய்­து­கொண்­ட­வர்­களை நேற்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், இஸ்ரேல் நாட்­டுக்கு தொழி­லுக்கு சென்று அங்கு பல கார­ணங்­களை சோடித்து அர­சியல் தஞ்சம் கோரும் நட­வ­டிக்­கையில் சிலர் ஈடு­பட்­டுள்ளனர்.

சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அர­சியல் தஞ்சம் என்­பது இலங்­கைக்கு ஒரு­போதும் பொருந்­தாது.

கடந்த ஆண்டில் இஸ்­ரே­லுக்கு தொழி­லுக்கு சென்­ற­வர்­களில் 13 பேர­ளவில் பல­த­ரப்­பட்ட கார­ணங்­களை தெரி­வித்து அந்­நாட்டில் தஞ்சம் கோரி­யுள்­ளனர்.

அதன்­கா­ர­ண­மாக பல பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இஸ்­ரே­லுக்கு தொழி­லுக்கு செல்­வ­தற்கு இருந்த சில­ருக்கு விசா அனு­ம­திப்­பத்­திர விநி­யோகமும் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

என்­றாலும் இந்த நிலைமை தொடர்­பாக நான் மற்றும் அதி­கா­ரிகள் தொடர்ந்து விளக்­க­ம­ளித்­ததன் மூலம் மீண்டும் அந்த தொழில் வாய்ப்பை இலங்­கைக்கு பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. குறிப்­பாக நாட்டில் பிர­தான அர­சியல் கட்­சிகள் இரண்டும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் நல்­லி­ணக்கம் மற்றும் நல்­லாட்சி இடம்­பெ­று­வ­தா­கவும் அதன்­ கா­ர­ண­மாக ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம்.
அதன் கார­ண­மாக அர­சியல் தஞ்சம் எந்­த­வ­கை­யிலும் அவ­சியம் இல்லை என்­பதையும் தெரி­வித்­தி­ருந்தோம். அத்­துடன் இந்த விளக்­கத்தை இஸ்ரேல் அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது.

மேலும் கடந்த காலத்தில் ஆசி­ரியர்களாக இருந்த சிலரை இஸ்­ரே­லுக்கு தொழி­லுக்கு அனுப்­பி­யதால் அவர்கள் அங்கு விவ­சாயம் செய்­வ­தற்கு விரும்ப­வில்லை. இதன் கார­ண­மாக சிக்­கல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இஸ்­ரேலில் விவ­சாயத் தொழில் மாத்­தி­ரமே இருக்­கின்­றது. அதுவும் 6 மாதங்களில் மீண்டும் இலங்­கை திரும்ப ­வேண்டும்.

இஸ்­ரேலில் நில­வு­கின்ற கடும் உஷ்­ண­மான காலநிலையே இதற்கு கார­ண­மாகும். இந்த காலப்­ப­கு­தியில் விவ­சாயத் தொழில் செய்­வது நிறுத்­தி­வைக்­கப்­படும். எனவே இஸ்­ரேலில் தொழி­லுக்கு வெளி­நாட்டு தொழி­லா­ளர்­களை 6 மாதங்க­ளுக்கு மாத்­தி­ரமே சேர்த்­துக்­கொள்­வ­துடன் 6 மாதங்க­ளுக்குப் பின்னர் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். பின்னர் தான் பணிபுரிந்த நிறுவனம் விரும்பினால் மீண்டும் 6 மாத கால தொழிலுக்கு செல்லமுடியும். அத்துடன் இலங்கைப் பெறு­ம­தியில் ஒரு இலட்சம் ரூபா அங்கு மாதாந்தம் சம்பளம் பெறமுடியும் என்றார்.

இஸ்ரேலில் தஞ்சம் கேட்கும் இலங்கையர்கள். #lka இஸ்ரேலில் தஞ்சம் கேட்கும் இலங்கையர்கள். #lka Reviewed by Madawala News on 8/06/2016 11:16:00 AM Rating: 5