Free Space

படைப்பிலக்கிய வாதிகள் கௌரவிப்பும் பாராட்டும். #lka



இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முஸ்லிம் படைப்பிலக்கிய வாதிகளுக்கு கௌரவிப்பும் பாராட்டும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய இலக்கியஆய்வகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஆய்வகத்தின் விழா சம்பந்தமான கலந்துரையாடலில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆய்வகம் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

புதிய தலைமுறையில் பல படைப்பாளிகள் தற்போதுஇலக்கியத் துறைக்குள் நுழைந்து இயங்கி வருகின்றனர்.இவர்களில் திறமையானோரை அடையாளம் கண்டுஅவர்களைப் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்தும்என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புடைப்பிலக்கியத் துறையோடு சம்பந்தப்பட்ட பலர் ஏனையபடைப்பிலக்கியவாதிகளுக்கு அறிமுகமற்ற நிலையில்இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடையவிபரங்களையும் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளும் வசதிஎங்கும் இல்லை

. ஏனவே, ஒரு பொது அறிவித்தல் மூலம்படைப்பிலக்கியவாதிகளை ஆய்வகத்துடன் தொடர்பு படுத்திஅவர்களது விண்ணப்பங்களை ஒரு குழு மூலம் பரிசீலித்துஅவர்களைத் தேர்ந்து கௌரவமும் பாராட்டும் வழங்குவதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விடுபடல்களைத்தவிர்க்க முடியும் என்று ஆய்வகம் கருதுகிறது.
குடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ்இலக்கிய மாநாட்டில் கௌரவமோ பாராட்டோ பெறாதபடைப்பிலக்கியவாதிகளே இம்முறைகௌரவிக்கப்படவுள்ளனர்.

பேராளர், மற்றும் படைபிலக்கியவாதிகள் பற்றய விபரப்படிவங்களை எதிர்வரும் 29.08.2016 முதல் பிராந்திய - விழாஇணைப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.இணைப்பாளர்கள் இல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்
Ashroff Shihabden, 
37, Dhankanatha Road, 
Mabola, 
Wattala என்ற முகவரிக்கு சுயவிலாசம் எழுதப்பட்டுத் தபால்தலை ஒட்டப்பட்ட கடித உறையை அனுப்பித் தபாலில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை ஆய்வகத்தினால் மூத்த தமிழ் எழுத்தாளர்கள்சிலரும் கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பாளர்கள் பின்வருமாறு.

அம்பாறை மாவட்டம்
--------------------------------
கவிஞர் சோலைக்கிளி - 075 225 6556
கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ்
கவிஞர் நிந்தவூர் ஷிப்லி - 077 230 1539

மட்டக்களப்பு மாவட்டம்
------------------------------------
கவிமணி எம்.எச்.எம். புகாரி - 077 268 6159
கவிஞர் வாழைச்சேனை அமர் - 077 163 3150

திருகோணமலை மாவட்டம்
------------------------------------------
கவிஞர் ஏ.எம்.எம். அலி - 077 276 5174
கவிஞர் நாஸிக் மஜீத் - 077 767 2383

அனுராதபுர மாவட்டம்
----------------------------------
கவிஞர் அன்பு ஜவஹர்ஷா - 071 999 7845
கவிஞர் வஸீம் அக்ரம் - 077 088 8048

புத்தளம் மாவட்டம்
-----------------------------
கவிஞர் ஜவாத் மரைக்கார் - 071 424 4387
எம்.ஐ.எம். இன்பாஸ் - 071 209 9370

மலையகம்
-----------------
எம்.எம். பீர்முகம்மத் - 077 666 1336
கவிஞர் லறீனா அப்துல் ஹக் - 075 293 9716
கவிஞர் லுணுகல ஸ்ரீ - 077 442 5265

தென்மாவட்டங்கள்
-----------------------------
கவிஞர் திக்குவல்லை ஸப்வான் - 077 490 3816

வடபுலம்
-------------
கவிஞர் மன்னூரான் ஷிஹார் - 077 329 8315
படைப்பிலக்கிய வாதிகள் கௌரவிப்பும் பாராட்டும். #lka படைப்பிலக்கிய வாதிகள் கௌரவிப்பும் பாராட்டும். #lka Reviewed by Madawala News on 8/19/2016 04:01:00 PM Rating: 5