tg

வஹியைக் கற்ற உலமாக்களும் வேறு துறைசார் நிபுணர்களும் சமமானவர்களா ?


அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி -

உலமா என்ற அறபுச் சொல் மொழிரீதியாக அனைத்து துறைசார் நிபுணர்களையும் ( காபிர்கள் , கிறிஸ்தவர்கள் , யூதர்கள் ) உள்ளடக்கிக் கொண்டாலும் குறித்த ஒரு சமூகத்தின் வழக்காறின் அடிப்படையிலோ வஹியின் ஆழமான புரிதலின் அடிப்படையிலோ எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதனை சரியாக தெரிந்து கொள்வது அவசியமாகும். 

உதாரணமாக முஸ்லிம் என்றால் யார் ? 

மொழி ரீதியாக கட்டுப்படுபவன் என்று பொருள்படும் அவன் கிறிஸ்தவனாக இருந்தாலும் அவனது மதத்திற்கு கட்டுப்படும் போது அவனும் முஸ்லிமே.. ஆனால் குர்ஆன் ஸுன்னாவின் ஒளியில் முஸ்லிம்கள் என்றால் அல்லாஹ்விற்கு மாத்திரம் கட்டுப்படுபவர்கள் என்றே பொருள் கொள்கிறோம். 

வஹியின் அடிப்படையில் நோக்கும் போது அல்குர்ஆன் ஸுன்னாவை கற்றுக் கொண்டவர்களையே அது உலமாக்கள் என்ற பதத்தினூடாக அடையாளப்படுத்துகிறது "அல்லாஹ்வை அவனது அடியார்களில் அதிகம் அஞ்சுபவர்கள் உலமாக்களே" 

தான் பெற்ற அறிவு அல்லாஹ்வை அஞ்ச வைக்குமாக இருந்தால் அந்த அறிவு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாக படிப்பதினூடாகவே சாத்தியமாகும்.

கணக்கியல் ஆய்வாளரோ , விஞ்ஞானியோ , வரலாற்று ஆய்வாளரோ தமது சொந்த துறைசார் ஆய்வினூடாக ஒரு பொழுதும் அல்லாஹ்வை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது அவர் குர்ஆனை சுன்னாவை முறையாக கற்றுக் கொண்டாலே தவிர .

சூறதுல் பாதிஹாவையே ஒழுங்காக ஓதத்தெரியாத அதன் அர்த்தம் புரியாத ஒரு முஸ்லிம் இலக்கிய வாதியால்  அந்த இலக்கியத்தின் மூலம் அல்லாஹ்வைப் புரிந்து அல்லாஹ்வை அவன் சொன்ன முறைப்படி  அஞ்சிவிட முடியமா ?

அல்லது அவரையும் ஒரு ஆலிம்தான் என்று இமாமத் செய்யவோ, மக்களுக்கு வஹியை கற்றுக் கொடுக்கவோ,  மார்க்க உபதேசம் புரிவதற்கோ , தப்ஸீர்களான ( தபரி , இப்னு கதீர் , குர்துபி , பைழாவி , துர்ருல் மன்தூர் , 
கஷ்ஷாப் , ரூஹுல் மஆனி .....  ) போன்ற நூற்களை கற்றுக் கொடுக்க மத்ரஸாக்களில் உஸ்தாதாகவோ நியமிப்பீர்களா ?

சரி ஹதீஸ் நூற்கள் குதுபுஸ் ஸித்தா உற்பட ( முஸ்னத் அஹ்மத் , முஸ்னத் அபூ தாவுத் , தாரகுத்னி , பஸ்ஸார் , தபராணி , பைஹகி....... போன்ற நூற்களை கற்றுக் கொடுக்க மத்ரஸாக்களில் உஸ்தாதாக நியமிப்பீர்களா ?

புஹாரியின் 600 க்கும் மேற்பட்ட விரிவுரை நூற்களின் பெயர்களாவது ( பத்ஹுல் பாரி என்ற பெயரில் உள்ள மூன்று விரிவுரை நூற்கள் உற்பட , இர்ஷாதுஸ் ஸாரி , உம்ததுல் காரி , பைழுல் பாரி , இன்ஆமுல் பாரி ..... ) அவர்களுக்கு தெரியுமா ? 

விரிவஞ்சி வஹியின் இந்த இரண்டு அடிப்படைக் கலைகளோடு மட்டும் சுருக்கிக் கொள்கிறேன். 

தஹஜ்ஜுதிலிருந்து மறுநாள் வித்ரு வரை  கால அல்லாஹ் , கால ரஸூலுல்லாஹ் என்றே தனது பத்து, இருபது , முப்பது , வருடங்களை அல்லாஹ்வோடும் அவனது தூதரோடும் வாழும் உலமாக்களோடு கால  அல்லாஹ் என்று வரும் பதத்திலுள்ள அல்லாஹ் என்ற சொல்லின் லாமை தப்ஹீமாக உச்சரிப்பதா ? தர்கீகாக உச்சரிப்பதா என்று கூட தெரியாதவர்களுடன் ஒப்பிடுவதை புத்தியள்ள ஒருவரால் ஜீரணிக்க முடியுமா ?

வஹிக்கு மேற்கு சாயம் பூசாமல் வஹியை வஹியின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 

குறிப்பு - பயனுள்ள கல்விகள் எந்த பெறுமானமும் அற்றது என்று சொல்லவரவில்லை , அதற்கு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுப்போம் , எதனை எந்த இடத்தில் வைக்க வேண்டுமே அதனை அந்த இடத்தில் வைப்போம் என்பதே எனது கருத்து.

வஹியைக் கற்ற உலமாக்களும் வேறு துறைசார் நிபுணர்களும் சமமானவர்களா ? வஹியைக் கற்ற உலமாக்களும் வேறு துறைசார் நிபுணர்களும் சமமானவர்களா ? Reviewed by Madawala News on 8/22/2016 04:58:00 PM Rating: 5