Sunday, August 28, 2016

மடவளை மக்கள் மீதான வீண் சுமைகள் .

Published by Madawala News on Sunday, August 28, 2016  | 1:- குப்பை
~~~~~~~~

ஒரு கிராமமாக இருந்து நகரமாக மலர்ந்து வரும் மடவளை மக்கள், அடிக்கடி தம் பிரதேச சபையுடன் முரண்படும் தலைப்பு - "குப்பை".

அவரவர் வீட்டின் முன் தமது அன்றாட குப்பைகளை வைக்குமாறு அறிவுறுத்தி, அவற்றை குப்பை வண்டியில் ஏற்றிச் செல்வது வழமை. (பிரதான வீதியிலிருந்து கொஞ்சம் உள்ளே வீடு அமைந்துள்ள மக்கள் தமது குப்பைகளை என்ன செய்வதென்று இன்னும் தீர்வு வழங்கப்பட்டதாக அறியவில்லை)

அதேநேரம், தெருவில் ஆங்காங்கு குப்பைகள் வீசப்பட்டிருப்பதை தினமும் காலையில் காணலாம்.

அதிகாரிகள் உட்பட, பொதுமக்கள் கூட இவ்விஷயத்தில் எமதூர் மக்களையே வசை பாடுகின்றனர். (அதில் ஓரளவு உண்மை இருந்தாலும்) இந்த அநாமதேய குப்பைகள் யாருடையவை? என்ற கேள்விக்கு முழுமையான பதில் யாரிடமும் இல்லை.

எனவே, ஒரு நள்ளிரவில் நடந்த சம்பவத்தை இங்கு சொல்கிறேன். அதனுள் மறைந்துள்ள ரகசியத்தை புரிந்துகொள்ளவும்.

மைதானம் அருகில் (மக்கள் வங்கி எதிரில்) குப்பை போடக்கூடாதென அறிவித்தல் இருந்தும் கூட, தினமும் காலையில் அவ்விடம் குப்பைகளால் நிரம்பியிருக்கும்.

ஒருநாள் நள்ளிரவு 1 மணியிருக்கும். அங்குள்ள உயரமான கட்டடமொன்றில் இருந்த நபர், சிரிமல்வத்த பாதையினூடு ஒரு லாறியில் வந்து பெருமளவான குப்பைகளை அவசரமாக வீசிச் செல்வதை அவதானித்துள்ளார்.

(இருட்டில் வாகன அடையாளத்தை, இலக்கத்தை பார்க்க முடியவில்லை)

மறுநாள் வழக்கம் போல குப்பை அகற்றும் தொழிலாளர்கள் எரிச்சலுடன் அவ்விடத்தை சுத்தம் செய்தனர்.

இவ்விஷயத்தில் மொத்தப்பழியும் மடவளை மக்கள் மீதே விழுந்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். ஆனால், உண்மையான குற்றவாளி யார்? இவர்கள் மடவளையா?
_________________________

02: தெருநாய்கள்
~~~~~~~~~~~~

மடவளையில் (முஸ்லிம்கள் என்பதால்) வீடுகளில் நாய் வளர்ப்பதில்லை. ஆனால், நம்மை சுற்றியுள்ள எல்லா ஊர்களிலும் வீடுகளில் நாய் நிச்சயம் உண்டு என்பதை ஞாபகப்படுத்திக் கொள்க.

மடவளைக்குள் அடிக்கடி பெரிய சைஸ் நாய்கள் புதிதாக அறிமுகமாவதும், சிலவற்றின் கழுத்தில் 'பெல்ட்' போடப்பட்டிருப்பதும் எப்படி?

இவற்றை அவதானிக்கையில்...

வீடுகளில் உள்ள நாய்கள் வயது போய், உரோமம் உதிர்ந்து, சொறிச்சல், தெள்ளு போன்ற நோய்கள் உருவாகும் போது அவற்றை மடவளைக்கு (இறைச்சிக்கடை மீதான நம்பிக்கையிலோ என்னவோ) ஏற்றுமதி செய்துவிடுகின்றனர் என பொதுமக்களுக்கு சந்தேகம் வருவதில் நியாயம் இருக்கிறது.

மேலும் இவை பெரிய கூட்டமாக அலைந்து திரிவதால் கல்லூரி சிறுவர்கள் மீது திடீரென பாய்வதும்,

அவர்கள் சிதறி ஓடுவதால் வாகன விபத்துகள் நடக்க முனைவதும்,
மோட்டார் சைக்கிள் சாரதிகள் தடுமாறுவதும்,
குப்பை பொதிகளை பீய்த்து அசிங்கப்படுத்துவதும் தினசரி செய்திகளாகும்.
________________________

எனவே ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகை வரிப்பணம் செலுத்தும் மக்களை, வியாபாரிகளைக் கொண்ட ஒரு ஊர் என்ற வகையில்...
இந்த #குப்பையகற்றல் மற்றும் #தெருநாய்கள் பிரச்சனையை அவசரமாக ஒரு முடிவுக்கு கொண்டு வருமாறு பொறுப்பானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

மடவளை இன்ஸாப்
(Inshaaf Sri Lanka)


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top