tg travels

(படங்கள்) மடவளை மதீனா தேசிய பாடசாலையை பாதுகாக்கும் அமைப்பினரின் ஒன்று கூடலில் தெரிவிக்கபப்ட்டவை.- ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை மதீனா மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்காக தாம் தொடர்ந்து பாடுபடுவதுடன் மதீனாவின் இழந்த பெருமைகளை மீண்டும் உருவாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக மதீனா தேசிய பாடசாலையை பாதுகாக்கும் அமைப்பினர் (பாசல் சுருகீமே கமிட்டுவ) தெரிவித்தனர்.

மேற்படி அமைப்பின் 67வது ஒன்று கூடலில் போதே மேற்படி அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.எம்.ரிஸ்யான் இது பற்றித் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஒரு பாடசாலை என்பது பொதுவான ஒரு அமைப்பாகும். அதன் நிர்வாகிகளாக உள்ள சட்டரீதியான அமைப்புக்கள் தவிர்ந்த பொதுமக்களுக்கும் ஒரு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பாரிய பொறுப்புக்கள் உள்ளன.  அப்படியான பொறுப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாக யாரும் முன்வருவது குறைவு.

 பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற அடிப்படையில் கருத்துக் கூற பலர் இருப்பினும் அவற்றை சரியாகவும் கச்சிதமாகவும் நிறைவேற்ற முன்வருவோர் மிக அரிது.

அந்த அடிப்படையில் மதீனா மத்திய கல்லூரியின் பழைய புகழை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பழைய மாணவர்கள் பலர் அதற்காக தமது தியாகங்களைச் செய்தனர்.

 ஆனால் எமது இறுதி நோக்கம் இழந்த புகழை மீண்டும் ஏற்படுத்த முயற்சிப்பதாகும். இதற்கு சகலரும் உதவ முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

பாடசாலை நிர்வாக சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்படி அமைப்பு தேவையான போது தமது ஒத்துழைப்பை வழங்கும் என்று கூறினார்.
மேற்படி அமைப்பின் அமர்விற்குத் தலைமை வகித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சீ.அப்துல் லதீப் தமது தலைமை உரையில் தெரிவித்ததாவது-


கடந்த காலங்களில் இவ் அமைப்பு பல முறை கூடி மதீனா தேசிய பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியது. அதன் வளர்ச்சிக்கு உள்ள முக்கிய தடைகளை அகற்றும் பணியில் ஒரு படி முன்னேறக் கிடைத்தமை இறைவன் தந்த ஒரு அருளாhகக் கருதுவதாகக் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மடவளைக் கிளைத் தலைவரான ஏ.எல்.ஏ.ரிசாட் கருத்துரைக்கும் போது கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான அமைச்சர்கள் இருவருக் கூடாகவும் மதீனாவின் வளர்ச்சிக்கு உதவிகள் பெற்றுத்தர முடியும் என்றும் அதற்கு அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் அமைச்சர் ரவூப் ஹகீம் ஆகியோர் எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 இவ்வளவு காலமும் நாம் அவர்களது உதவிகளைப் பெறுவதில் உற்சாகம் குன்றிக் காணப்பட்டதால் சில விடயங்கள் தாமதித்ததாகவும் அவர் மேலும் கூறினார். எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக இப்பாடசாலைக்கு  உதவிகளை பெற்றத் தர இரு அமைச்சர்களும் உறுதி தெரிவித்ததுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.ஜலீல் தெரிவித்ததாவது-

பாடசாலைகளுக்கு சட்ட வரையறைகள் உள்ளன. அதன் நிர்வாகத்தில் நாம் நினைத்தவாறு தலையீடுகளைச் செய்ய முடியாது. இருப்பினும் பொருத்தமான விடயங்களை முன் மொழியக் கூடிய வசதிகளும் சட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் எவர் மனமும் நோகாத வகையில் சட்டத்தை மதிக்கும் வகையில் செயற்படுவது உசிதம் எனக் கூறினார்.
எம்.எம்.நசீர் தனது உரையில் தெரிவித்ததாவது-

மதீனா தேசிய பாடசாலையின் ஒருபிரிவான அதன் ஆரம்பப்பாடசாலை சரா சரியாக வருடம் தோரும் 30 மாணவ மாணவிகளை ஐம்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைத்துள்ளது. ஆகக் குறைந்தது இக்கல்லூரிக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் அல்லாதவர்களில் அல்லது மடவளையைச் சேர்ந்தவர்களில் ஆரம்பக் கல்வியைக் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களையாவது பல்கலைக்கழகம் அனுப்பும் அளவு ஒரு திட்டம் தேவை என்றார். இந்த இலக்கை அடைய முடியா விட்டால் அது மெது ஊரின் வீழ்ச்சிக்கான ஒரு கசப்பான  உண்மையாகி விடும் என்றார்.

எம்.டி.எம். ஹூஸ்னி, ஜே.எம்.யாசீன் உற்பட இன்னும் பலர் உரையாற்றினர்.
மேற்படி அமைப்பின் செயற்பாட்டு அங்கத்தவர்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தனர்.
(படங்கள்) மடவளை மதீனா தேசிய பாடசாலையை பாதுகாக்கும் அமைப்பினரின் ஒன்று கூடலில் தெரிவிக்கபப்ட்டவை. (படங்கள்) மடவளை மதீனா தேசிய பாடசாலையை பாதுகாக்கும் அமைப்பினரின் ஒன்று கூடலில் தெரிவிக்கபப்ட்டவை. Reviewed by Madawala News on 8/30/2016 08:50:00 AM Rating: 5