Accaddemy

இன, மத ,பிரதேச ,கட்சி பாகுபாடின்றி தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் - இம்ரான் MP

 

இன, மத ,பிரதேச ,கட்சி பாகுபாடின்றி  தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார் இன்று புதன்கிழமை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை பாராளுமன்ற கட்டட தொகுதியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர்
 கிழக்கு மாகாணத்தில் பலவருடகாலமாக தொண்டராசிரியர்களாக கடைமையாற்றுபவர்களுக்கு விரைவில்  ஆசிரியர் நியமனம் வழங்க அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் இதன்மூலம் கிழக்குமாகாணத்தில் அதிகளவில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை வேலைவாய்ப்பின்மையை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும்
ஆனால் இந்நியமனங்கள் ஒரு குறுப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்தும் முகமாக அமைந்துவிடும் என்ற ஐயப்பாடு கிழக்குமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தாலும் சிவில் அமைப்புகளாலும் வெளியிடப்பட்டுள்ளது காரணம் கிழக்குமாகாணத்தில் கடந்த காலங்களில் பல பக்கச்சார்பான நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன
ஆகவே வழங்கப்படவுள்ள இந்நியமனங்கள் இன,மத, பிரதேச, கட்சி, பாகுபாடின்றி வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் இதற்கு மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி அமைச்சு கிழக்குமாகாண சபையுடன் இணைந்து செயற்பட்டு நியமனங்களை வழங்க வேண்டும் என்றார்
இக்கலந்துரையாடலில் திருகோணமலை,மட்டகளப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொண்டராசிரிய நியமனம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை அமைச்சரிடம் தெரிவித்தனர்
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தொண்டராசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையையும் தான் உடனே ஆரம்பிப்பதாகவும் இந்நியமனத்தில்  பாராளுமன்ற உறுப்பினர், தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகளின் பரிந்துரைகளை உள்வாங்கி பக்கசார்பற்ற நியமனங்களை வழங்குவதாகவும்  உறுதியளித்தார் 
ஊடகப்பிரிவு  
இன, மத ,பிரதேச ,கட்சி பாகுபாடின்றி தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் - இம்ரான் MP இன, மத ,பிரதேச ,கட்சி பாகுபாடின்றி  தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் - இம்ரான் MP Reviewed by Madawala News on 8/10/2016 11:16:00 PM Rating: 5