Free Space

மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் சீசெல்ஸிற்கான இலங்கை தூதரகம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள அறிக்கை. #mr



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீசேல்ஸ் விஜயத்திற்கு 100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் சீசெல்ஸிற்கு மேற்கொண்ட விஜயங்களுக்காக இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விஜயங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை சீசெல்ஸிற்கான இலங்கை தூதரகம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் சீசெல்ஸிற்கு மேற்கொண்ட விஜயத்திற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மீளவும் அப்போதைய ஜனாதிபதியாக கடயைமாற்றிய மஹிந்த ராஜபக்ஷ 97 பிரதிநிதிகளுடன் சீசெல்ஸிற்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை வங்கி , இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்றவற்றின் கிளைகளை ஆரம்பித்து வைக்க இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்திற்காகவும் சுமார் 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான ஓர் அறிக்கை பற்றி தமக்கு எதுவும் தெரியாது வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார். D C
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் சீசெல்ஸிற்கான இலங்கை தூதரகம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள அறிக்கை. #mr மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் சீசெல்ஸிற்கான இலங்கை தூதரகம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள அறிக்கை. #mr Reviewed by Madawala News on 8/22/2016 11:49:00 AM Rating: 5