Free Space

மஹிந்த ராஜபக்ஷ தனித்து போட்டியிட்டால் வெளியிடப்படும் ரகசியங்கள் எவை. #mr



முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் இர­க­சி­யங் கள் உரிய நேரத்தில் சரி­யான சந்­தர்ப்பம் பார்த்து வெளி­யி­டப்­படும். என்­னி­டமும் பல இர­க­சி­யங்கள் உள்­ளன. எப்­போது மஹிந்த ராஜபக்ஷ தனித்து அர­சியல் பய­ணத்தை ஆரம்­பிப்­பாரோ அப்­போது வெளிப்­ப­டுத்­துவோம் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அதேபோல் இந்த இர­க­சி­யங்கள் நிதி மோச­டிகள் அல்­லது ஊழல் மோச­டிகள் என்று அர்த்தம் அல்ல. அதையும் தாண்­டிய பல்­வேறு விட­யங்கள் உள்­ளன.

அர­சியல் இர­க­சி­யங்கள் பல உள்­ளன . அவற்றில் ஒன்­றாகக் கூட இருக்­கலாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. இதில் மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் உள்ள இர­க­சி­யங்கள் தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு அமைச்சர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்.

புதிய அர­சியல் கட்­சி­யினை அமைத்தால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்­பி­லான இர­க­சி­யங்­களை வெளி­யி­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ர­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளமை அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாகும்.

அவற்றை உறிய நேரத்தில் ஜனா­தி­பதி வெளி­யி­டுவார். அதேபோல் இந்த இர­க­சி­யங்கள் நிதி மோச­டிகள் அல்­லது ஊழல் மோச­டிகள் என்று அர்த்தம் அல்ல. அதையும் தாண்­டிய பல்­வேறு விட­யங்கள் உள்­ளன. அர­சியல் இர­க­சி­யங்கள் பல உள்­ளன . அவற்றில் ஒன்­றாகக் கூட இருக்­கலாம். இர­க­சியம் என்று தெரி­வித்­த­வுடன் உட­ன­டி­யாக ஒரு தீர்­மா­னத்தில் இருந்து எவரும் விமர்­சிக்க வேண்டாம்.

முன்­னைய ஆட்­சியில் ஜனா­தி­ப­திக்கும் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ருக்கும் இடை­யி­லேயே பல்­வேறு இர­க­சி­யங்கள் இருந்­தன. அவற்றை முன்னாள் ஜனா­தி­பதி கண்­ட­றி­ய­வில்லை. முன்னாள் ஜனா­தி­ப­திக்கு தெரி­யாத பல்­வேறு உண்­மை­களை செய­லாளர் தெரிந்து வைத்­தி­ருந்தார். அந்த உண்­மை­க­ளா­கக்­கூட இருக்­கலாம். எனினும் இப்­போதும் கட்­சியை பிள­வு­ப­டுத்த கூடாது என்ற வகை­யிலும் கட்­சிக்குள் குழப்­பங்கள் ஏற்­ப­டக்­கூ­டாது என்ற நோக்­கத்­திலும் இந்த இர­க­சி­யங்­களை ஜனா­தி­பதி தெரி­விக்க மறுக்­கலாம். எனினும் சரி­யான சந்­தர்ப்­பத்தில் தெரி­விப்பார்.

மேலும் முன்­னைய ஆட்­சியில் நடந்த பல்­வேறு சம்­ப­வங்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் பல்­வேறு இர­க­சி­யங்கள் எமக்கும் தெரியும். கட்­சி­யாக அவர்கள் தனி­யாக இயங்கும் வரை­யி­லுமே நாமும் பார்த்­து­கொண்டு உள்ளோம். இவர்கள் தனி­யாக வெளி­யே­றிய பின்னர் எம்­மிடம் இருக்கும் உண்­மை­க­ளையும் நாம் வெளிப்­ப­டுத்­துவோம்.

அத்­துடன் இந்த இர­க­சி­யங்­களை வெளி­யி­டுவோம் என தெரிவித்ததும் அது மஹிந்த தரப்பை அச்சுறுத்துவதாக அமையாது. எனினும் எச்சரிக்கையாக அமையலாம். நாட்டுக்கு எதிராக செயற்பாடுகளின் போதும் அதேபோல் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு வெளிப்படையாக எச்சரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றார்.

மஹிந்த ராஜபக்ஷ தனித்து போட்டியிட்டால் வெளியிடப்படும் ரகசியங்கள் எவை. #mr  மஹிந்த ராஜபக்ஷ தனித்து போட்டியிட்டால் வெளியிடப்படும் ரகசியங்கள் எவை. #mr Reviewed by Madawala News on 8/25/2016 09:46:00 AM Rating: 5