Kidny

Kidny

நாம் ஒருபோதும் தமிழ்,முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக போரா­ட­வில்லை. #mrநாம் ஒருபோதும் தமிழ்,முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக போரா­ட­வில்லை. மாறாக இன­வா­தத்­தி­னையும் தனி­நாட்டு கோரிக்­கையும் மையப்­ப­டுத்தி ஆயுதம் சகிதம் போரா­டிய குழு­வுக்கு எதி­ரா­கவே யுத்தம் செய்தோம்.

அதனை திரி­பு­ப­டுத்தி காண்­பிக்க சிலர் முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

நாட்டின் நீதி கட்­ட­மைப்­பிற்கு புறம்­பான முறையில் காணாமல் போனோர் அலு­வ­லக சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. எனவே அது அதி அச்­சு­றுத்­த­லான ஒரு செயற்­பா­டா­கவே அமையும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
கொழும்பு, தும்­முல்ல சந்­தியில் அமைந்­துள்ள சம்­புத்­தத்வ ஜயந்தி மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற புத்­தக வெளி­யீட்டு நிகழ்­வொன்றின் பிர­தம அதி­தி­யாக பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சில சந்­தர்ப்­பங்­களில் எமக்­கான வாய்ப்­புக்கள் கிடைக்­காமல் போயி­ருக்­கலாம். அதன்­போது நாம் மௌனம் சாதித்தால் எமக்­கான உரி­மை­களும் எமது தேசமும் எமக்­கா­ன­தாக இருக்­காது.

 அதற்­காக நாம் கடந்த காலத்தில் நடத்­திய போராட்டம் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­னது என பொருள்­கொள்ளக் கூடாது.

மாறாக இன­வா­தத்­தினை மையப்­ப­டுத்­திய தனி நாடொன்று வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்து எமது நாட்டை பிள­வு­ப­டுத்த ஆயு­தங்கள் ஏந்தி போரா­டிய ஒரு குழு­வி­னரை முற்­றாக முடக்­கவே நாம் போராட்டம் நடத்­தினோம். அதன்­போது நாட்டை பிள­வு­ப­டுத்த முற்­பட்­ட­வர்­களை தோற்­க­டித்தோம்.

அவ்­வாறு நாம் போராட்டம் நடத்தி யுத்­தத்­தினை வெற்­றி­கொண்­டி­ருக்­கா­விட்டால் இன்றும் எமது நாட்டில் வாழும் மக்களில் சிலர் வெள்­ளைக்­கொ­டி­களை ஏந்­திக்­கொண்­டி­ருக்க வேண்­டிய நிலை­மையே காணப்­படும்.

ஆனால் யுத்த வெற்­றியின் பின்னர் எமது போராட்ட வடி­வத்­தினை திரிபு படுத்­திக்­காட்ட பலர் முற்­ப­டு­கின்­றனர். இன்று எமது நாட்டில் உள்ள அர­சியல் சூழ்­நி­லையும் ஏற்­பு­டை­ய­தல்ல. பாரா­ளு­மன்­றத்­திலும் கூட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர் கூறப்­பட்டு அடக்­கு­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

தனி­யாக அழைத்தும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மிரட்டல் விடுக்­கப்­ப­டு­கின்­றது.அதே­போன்று அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட சட்­ட­மூ­லத்தின் ஊடாக எமது நாட்டின் நீதி கட்­ட­மைப்பு முழு­மை­யாக மீறப்­பட்­டுள்­ளது.

அதேபோல் இந்த சட்­ட­மூலம் அதி அச்­சு­றுத்­த­லான ஒன்­றாகும். இதனால் நாட்டில் நிலைத்­தி­ருந்த ஜனா­நா­யகம் முற்­றாக சீர­ழிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்வாறான நிலையிலும் தொடர்ந்தும் எம்மால் மௌனம் சாதிக்க முடியவில்லை. அவ்வாறு மெளனித்திருக்கும் போதும் எமது தரப்பினர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலடைக்க முற்படுகின் றனர். அதனால் தொடர்ந்தும் மௌனிக்க முடியாது என்றார்.

நாம் ஒருபோதும் தமிழ்,முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக போரா­ட­வில்லை. #mr நாம் ஒருபோதும் தமிழ்,முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக போரா­ட­வில்லை. #mr Reviewed by Madawala News on 8/27/2016 01:44:00 PM Rating: 5