முஸ்லீங்களை அழிக்க சேனாக்கள் தேவையில்லை நம்மவர்களே போதுமானவர்கள்...( வீடியோ இணைப்பு)



-முஹம்மத் அஸ்லம் -
இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரங்கள்  மற்றும் சதித்திட்டங்கள் அண்மைக்காலமாக வெளிப்படையாகவே அரங்கேற்றப்பட்டு வரும் சூழலில் முஸ்லீம் சமூகத்தின் கடந்த கால செயற்பாடுகள் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையிலேயே அமைந்துள்ளன.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை திஹாதிய பிரதேசத்தில் இரு இயக்க குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவிய நிலையில் தற்போது குறித்த மோதல் வீடியோக்கள் லட்சக்கணக்கானவர்கள் பின்தொடரும் சிங்கள இணைய ஊடகங்களிலும் சமூகவலை தளங்களிலும் பரவிவருகின்றன.

தப்லீக் ஜாமாத் - தவ்ஹீத் ஜமாத் குழுக்கள் இடையே மோதல் என்ற தலைப்பில் சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள அதேவேளை இந்த செய்திக்கு மிக மோனமான பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் முஸ்லீம் சமூகத்தின் மீது பேரும்பான்மை சமூகத்தினரினால் முன்வைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான செய்தி ஒன்று பொதுபலசேனா முகநூலில் பகிரப்பட்டுள்ளது.

தங்கள் கொள்கைகளுக்கு மாற்றமான கருத்துடையவர்களை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் அரச புலனாய்வு பிரிவு வரை சில தஹ்வா இயக்கங்கள் தொடர்பில் தீவிரவாதிகள் எனும் அளவுக்கு பிழையான தகவல்களை வழங்கிய சம்பவங்கள் கடந்த காலங்களில் தாராளமாக இடம்பெற்றன.

அதுமாத்திரமன்றி சமூகத்தை விற்றுப்பிழைக்கும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசியல் லாபம் கருதி அகீதாவுக்கு உற்பட்ட சில தஹ்வா இயக்கங்கள் தொடர்பில் பிற சமூகங்களுக்கு மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்பியிருந்தார்கள்.

இந்த சூழ்நிலைகளில் எரிந்துகொண்டுள்ள நெருப்பில் என்னையை ஊற்றும் வகையில் திஹாரிய பிரதேசத்தில் தங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்துடைய அகீதாவுக்கு உற்பட்ட இன்னொரு இயக்கத்தினர மீது பொலிஸார் முன்னிலையிலே நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளமை இந்த நாட்டு முஸ்லீம்கள் தொடர்பில் பிறசமூகங்களிடையே பிழையான புரிதல்களை தோற்றுவித்துள்ளன.

இது போன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை முஸ்லீம்களின் ஏகப்பிரநிதிகள் என தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பினர்களும் மெளனம் காப்பது முஸ்லீம் சமூகத்துக்கு கிடைத்துள்ள சாபக்கேடாகும்.

தற்போது முஸ்லீம் சமூகத்தின் நடத்தைகள் எம் தலைகள் மீது மண்ணை வரி இறைத்துக்கொள்ள நாமே போதுமானவர்கள் என்பதும் எம்மை அழிக்க சேனாக்கள் தேவையில்லை என்பதை காட்டி நிற்கிறது...

சம்பவ வீடியோ...

முஸ்லீங்களை அழிக்க சேனாக்கள் தேவையில்லை நம்மவர்களே போதுமானவர்கள்...( வீடியோ இணைப்பு) முஸ்லீங்களை அழிக்க சேனாக்கள் தேவையில்லை நம்மவர்களே போதுமானவர்கள்...( வீடியோ இணைப்பு) Reviewed by Madawala News on 8/29/2016 12:14:00 PM Rating: 5