Kidny

Kidny

சமூகத்தை பிரிக்க தடுமாறும் தேங்காப்பூ சண்டியர்கள். #muslimsசமூகத்தை பிரிக்க தடுமாறும் தேங்காப்பூ சண்டியர்கள்: சபீஸ் காட்டம் 

முன்னொரு காலத்தில் இரண்டுபேர் சண்டையிட்டுக்கொள்வார்கள் வெற்றி பெறமுடியாதவர் தனது இயலாமையை மறைத்து எப்படியாவது பழிதீர்த்து கொள்வதற்கு ஒருவகை இழிநிலையான வழிமுறையை கையாள்வார்கள் அது எவ்வாறென்றால்  வெற்றியாளனின் குடும்பத்தில் உள்ளவர்களை அசிங்கமாக பேசி அவனும் அசிங்கப்பட்டுக்கொள்வான் இவர்களை நமது மூதாதையர்கள் தொடை நடுங்கிகள் அல்லது தேங்காப்பூ  சண்டியர்கள் என்று கூறுவர். அவ்வாறானதொரு நிலைதான் இன்று பசீர் சேகு தாவுத்துக்கும் ஹசன் அலிக்கும் ஏற்பட்டுள்ளது.

பசீர் அவர் ஒருகாலமும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றி சிந்தித்தவர் கிடையாது அவரை யாரும் கணக்கிலடுக்கமாட்டர், ஆனால் ஹசன் அலி மரியாதைக்குரியவர் தான் வெளிநாட்டில் உழைத்த பணத்தினை மாமனிதர் அஸ்ரப் அவர்களுக்கு வழங்கி முஸ்லிம் மக்களுக்கென்று ஒரு  கட்சியை உண்டாக்கி இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு குழு அல்ல அதுவொரு சமூகம் எனும் நாமத்தைப்பெருவதற்க்கு மறைந்த தலைவரோடு அயராது பாடுபட்டவர், இவரது அனுபவம் எங்களது வயதையும் தாண்டியது அப்படிப்பட்ட ஒருத்தரை குறை காண்பது சற்று வருத்தமாக இருந்தாலும் நெறி பிறழ்வு ஏற்பட்டு பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் எண்ணம் அவரிடம் மேலோங்கி உள்ளபோது அதைப்பற்றி பேசாமல் இருப்பது அபத்தமாகும்.

சுமார் 17 வருடங்களுக்கு முன் அதாஉல்லாவினால்  ஹகீமின்  தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போது  இறுதிநேரத்தில் காட்டிக்கொடுத்து ஹகீமை காப்பாற்றி அதனூடாக பதவிகளை அடைந்தவர்தான் ஹசன் அலி

காட்டிக்கொடுப்பின் மூலம் பெற்ற பதவிகள் பரிபோனமையால் புத்தி பேதலித்து நாட்டில் பரந்து வாழும்  2/3 பகுதி முஸ்லிம்களிடமிருந்து கிழக்கு முஸ்லிம்களை வேறாக பிரிப்பதற்கு தனது எச்சங்களை ஏவிவிட்டு கூத்துப்பாக்கிறார் அலி, அவர்களும் குஞ்சு சோராக்குவதுபோல் நடந்து கொண்டார்கள்,

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று படுத்தி அரசியல் அடையாளம் பெறுவதற்கே  முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை சூட்டினார் பின்னர் அனைத்து மத மக்களையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு பதிலாக நுஆ என்ற கட்சியை உருவாக்கினார் அவரின் மறைவின் பின் அதாஉல்லா அவர்கள் முஸ்லிம்  காங்கிரசில் இருந்து பிரிந்தபோது தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினாரே தவிர கிழக்கு கட்சி ஒன்றை உருவாக்கவில்லை அதுதான் மறைந்த தலைவரின் பாசறை.

ஹசன் அலி அவர்கள் போட்ட பணத்திற்கு வட்டியோடு முதலையும் அரவிட்டுக் கொள்வதற்காக எப்போதுமே பச்சோந்தியாக நடந்து கொள்வார் தேர்தல்கள் வரும்போது கரையோர மாவட்டம் வேணும் என்பார் அரசாங்கத்தோடு இருப்பதில்லை என்று வீராப்பு பேசுவார் பின்னர் வாங்கிக்கொண்டு அடங்கி விடுவார். சில வேளைகளில் இந்தமணிசன் வயதான காலத்திலும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நாங்கள் எண்ணியதுண்டு,

இன்று முஸ்லிம்களுக்கு எவ்வளோவோ பிரச்சினைகள் காணப்படுகிறது அன்று கிரீஸ் மேன் பிரச்சினை இருந்தது மக்கள் அச்சத்தோடு தொழுதார்கள் இன்று தொழுவதற்கு முடியாமல் பள்ளியை மூடிவைத்துள்ளாளர்கள், அன்று தேர்தலில்  வன்முறை நடந்தது இன்று தேர்தலே நடத்தவில்லை ,அனுராதபுர பிரச்சினை,மகியங்கனை பிரச்சினை எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் எந்த தலைமையும் வாய் திறக்கவுமில்லை அறிக்கை விடவுமில்லை அதனை நீங்கள் சாணாக்கியம் என்கிறீர்கள்

அதே நேரம் எமது மக்களை கொன்று குவித்த கொடூரர்கள், தலைவரை சாம்பலாகிய புலிகள் அழிய வேண்டும் அளிக்கப்பட வேண்டும், கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி[புதைத்த வடகிழக்கை பிரிக்க வேண்டும் என எமக்காக உயிரை பணயம் வைத்து குரல் கொடுத்தவரை   நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்

இத்தருணத்தில் நமது மக்கள் பொறுமையாகவும் தெளிவுடனும் சிந்திக்க வேண்டும்  இன்று எழுச்சி என்று தொடங்கி உள்ளவர்கள்  நாளை பதவி வழங்க படுமானால் மறைந்த “தலைவர்  ஒரு ஆட்டை அறுத்தவாறு என்கனவில் வந்து என் சமூகத்தை பிரிக்கப்பார்கிரீர்களா? என கேட்டார்” எனக்கூறி பதவிகளை ஏற்றுக்கொண்டு மக்களை எம்மாற்றி விடுவர்.

நமக்கு எதுவேண்டும் என்று நாம் தீர்மானிக்கவேண்டும் தொடை நடுங்கிகளோ அல்லது தேங்காப்பூ சண்டியர்கள் சொல்லுவதையோ கேட்டு நாம் ஏமாறும் நிலையில் இருந்து மாற்றம் பெற  வேண்டும்
சமூகத்தை பிரிக்க தடுமாறும் தேங்காப்பூ சண்டியர்கள். #muslims சமூகத்தை பிரிக்க தடுமாறும் தேங்காப்பூ சண்டியர்கள். #muslims Reviewed by Madawala News on 8/12/2016 11:40:00 AM Rating: 5