Accaddemy

ஒலிம்பிக் பேட்மிண்டன்... இந்தியாவின் பி.வி.சிந்து நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்தார். #olympic



ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்  போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை மரினுடன் மோதி நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்தார் .

முதல் செட்டில் ஆரம்பத்தில் மரினின் கை ஓங்கியிருந்த நிலையில் பின்னர் சுதாரித்து அதிரடி காட்டி செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி ஷாக் கொடுத்தார் பி.வி.சிந்து.

ஆனால் 2வது செட்டில் சிந்து தடுமாறினார். முதலிலிருந்தே புள்ளிகளைக் குவித்த மரின், இறுதியில் 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம நிலைக்குக் கொண்டு போய் விட்டார்.

சற்றுமுன்னர் போட்டி முடிவை  தீர்மானிக்கும் இறுதிச் சுற்று முடிவடைந்த நிலையில் இருவரும் அதிரடியாக ஆடிய போதும்  ஸ்பெயின் வீராங்கனை மரின் 21 - 15 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி தங்கத்தை சுவீகரித்தார்.

போராடித் தோற்ற பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஒலிம்பிக் பேட்மிண்டன்... இந்தியாவின் பி.வி.சிந்து நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்தார். #olympic ஒலிம்பிக் பேட்மிண்டன்... இந்தியாவின் பி.வி.சிந்து நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்தார். #olympic Reviewed by Madawala News on 8/19/2016 08:28:00 PM Rating: 5